பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 79

யதை ೭-೯ಗಿ(55) கேட்ட இளங்கோவடிகளார், அதைத் தம் பாவிடை வைத்துப் போற்றியுள்ளார்.

"நிலைகெழு கூடல் நீள் எரியூட்டிய

பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என."

- - சிலம்பு. பதிகம் : 35-36

சாத்தனார் பாடப் புகுந்தது மாதவி துறவும் மணிமேகலை துறவுமே யாயினும், அவர் துறவுக்குக் காரணமாயிருந்தவள் கண்ணகியே யாதலின், தம் காப்பியத்தில் இயலும் இடமெல்லாம் அவளை ஏற்றிப் போற்றியுள்ளார். தம காப்பியத் தலைவியருள் ஒருத்தியாகிய மாதவி வாயிலாக, "கணவன் இறக்க உடன் உயிர் இழப்போரும், உயிர் தர்னே பிரியாதாயின் உடன்கட்டையேறி உயிரிழப்போரும், இம்மையில் இழந்த உடனுயிர் வாழ்க்கையை மறுமையிலானும் - பெறுவான் வேண்டிக் கைம்மை நோன்பு மேற் கொண்டு உடம்பு அடுவோரும் உயர்ந்தோர் போற்றும் பத்தினிப் பெண்டிரேயாயினும், எம் ஆயிழையாம் கண்ணகி நல்லாள் அவரினும் உயர்ந்தவளாவள். கணவனுக்கு உற்ற கடுந்துயர் கண்டு கடுஞ்சினம் கொண்டு அக்கொடுமை புரிந்த கோவேந்தைக் குற்றம் உணர்ந்து உயிர் துறக்கப் பண்ணியதோடு அமையாது, அக்கோவேந்தன் கூடல் மாநகரையும் எரியூட்டிக் கணவன் பழி தீர்த்த மாபெரும் பத்தினியாவள்” எனப் போற்றிப் புகழப் பண்ணிப் பாராட்டியுள்ளார்:

"காதலர் இறப்பின் கனையெரி பொத்தி

ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது,