பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 81

கடவுளே என அவள் தெய்வத் திருவுருவைக் கண்ணெதிர் கண்டும், "சிமையம் ஓங்கிய இமையமால் வரைத் தெய்வக்கல்" என, அவள் தெய்வத் திருமேனி இடப் பெற்ற கல்லுருவைக் கண்டும் கைகூப்பித் தொழுது பாராட்டியுள்ளார்.

3. மாடலன்

சோணாட்டுத் தலைச்செங்காடு எனும் ஊரினனாகிய மாடலன், கண்ணகியும் கோவலனும் பிறப்பதற்குமுன்பே பிறந்து, கண்ணகிக்குச் செங்குட்டு வன் எடுத்த விழா நிகழ்ச்சிக்குப் பின்னரும் வாழ்ந்திருந்த முதுமையுடையோனாவான்.

சேர சோழ ப்ாண்டிய நாடுகளின் அரசியல் நிகழ்ச்சிகளைப் பிழையற உணர்ந்திருந்தவன் இம் மாடலன். .

செங்குட்டுவன் சினம் தணிந்து சிறந்தது பயிற்ற அவனுக்கு அறம் உரைத்தவன் இம் மாடலன்.

செங்குட்டுவனோடிருந்து கண்ணகி வரலாற்றின் பெரும் பகுதியை அவனறியப் பண்ணியதோடு அவனுக்கு அறம் உரைத்தும் அவனோடு நெடுந் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் மாடலனை நன்கு உணர்ந்திருந்த இளங்கோவடிகளார், அவனை, நான்மறைகளை முற்றக் கற்றவன், நல்லனவே விரும்பும் ஒழுக்கத்தில் உரவோன்; நான்மறை கற்ற நல்லோர்க்கு முதல்வன், மலைவலம் வருதல், குமரியாடல் போல் வனவற்றை ஒழுக்காறாக் கொள்ளும் உயர்வோன்;