பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஆ புலவர் கா. கோவிந்தன்

தமர்சூழ வாழும் தலையாய அன்புடையான்' என்றெல்லாம் பாராட்டியுள்ளார்.

"தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து

நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன், மாடலன் என்போன் மாதவ முனிவன் மலைவலம் கொண்டு குமரியம் பெருந்துறை கொள்கையில் படிந்து தமர்முதல் பெயர்வோன். - சிலம்பு. 15; 11-16.

கண்ணகி வாழ்க்கையோடு தொடர்புடையவ ராகிய மாதவியையும், அவள் மனையற மாண்பையும், அவளை ஈன்ற தாய், அவள் கணவனை ஈன்ற தாய் ஆகிய இருபெரும் தாயரையும், அவர்தம் தலையாய அன்பையும், அவள் உயிர்த்தோழி தேவந்தியையும், அவள் தெய்வத் தன்மையினையும், அவளுக்கு வழித்துணை வந்த கவுந்தியையும், அவர்தம் துறவுக் கோலத் துய்மையினையும், அவளுக்கு அடைக்கலம் அளித்த மாதரியையும், அவள் தூய அன்பையும் அறிந்தவன் மாடலன்.

இவ்வளவு பெருமைக்கும் உரிய LßfTí_�l) மறையோன், கண்ணகியைத் "திருத்தகு மாமணிக் கொழுந்து" எனப் போற்றிப் புகழ்ந்துள்ளான்.

மாதவியின் மனையற மாண்பையும், கவுந்தியின் துறவறத் தூய்மையையும், தேவந்தியின் தெய்வத் தொடர்பையும், மாதரியின் மாசிலா மனத்தையும் உணர்ந்த ஒருவரால், கண்ணகி பாராட்டப்