பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 83

பெறுவாளாயின், அது, அவள் பெருமைக்குப் . பெரியதொரு சான்றாகு மல்லவா!

4. தேவராட்டி

ஐயை கோட்டத்துத் தேவராட்டி, ஆறலைத்தும் ஆனிரை கவர்ந்தும் உயிர்வாழும் கொடியோராகிய எயினர் குடியில் வந்தவளேயாயினும், அவள் கண்ணகியைப் பாராட்டுவதில் பெரிய சிறப்பு ஒன்றும்

உளது. - .

கண்ணகியை மாதவி பாராட்டினாள்; தேவந்தி பாராட்டினாள்; இவர் போல்வார் எண்ணற்றவர் பாராட்டியுள்ளார்கள் எனினும், அவரெல்லாம் மக்கள் வடிவில் இருந்தே பாராட்டியவராவர். கண்ணகியைத் தெய்வவடிவில் இருந்து பாராட்டியவள், ஐயை கோட்டத்துத் தேவராட்டி ஒருத்தியே. ஆகவே, அவள் கூறிய பாராட்டு, ஏனையோர் கூறும் பாராட்டுரை களுக்கில்லாத தனிச் சிறப்புடையதாகும்.

ஐயை கோட்டத்தில், காட்டுக் கொடுவழியைக் கடந்து வந்த காரணத்தால் கால்கடுக்கக் கணவனோ டிருந்த கண்ணகியைக் கண்ட அளவே, தேவராட்டி, "இவள், கொங்குநாட்டுக் கொற்றவை; குடநாட்டில் அரசோச்சும் அன்னை; தென் தமிழ் நாடாம் பாண்டி நாட்டுப் பெருந்தெய்வம்; தவத்தின் திருவுரு ஒப்புயர் வற்ற முழு மாணிக்கம் போல், உலகில், பெண்ணுருவம் தாங்கிவந்த திருமணி’ எனப் பாராட்டுமுகத்தான்,