பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 85

இவ்வாறு வழி வழியாக நல்லரசே நடாத்தும் ஒரு பேரரசின்கீழ் வாழும் பேறு பெற்றோராகிய மதுரை மாநகரத்து மக்கள், கணவன் கொலையுண்டான் எனக் கேட்டுக் கடுஞ்சினம் கொண்டு, கையிற் சிலம்பேந்திக் காவலன் கோயில் நோக்கி விரையும், கண்ணகியைக் கண்ட அளவே, வழுதியர் செங்கோல் வளையாது என்பரே! அந்தோ! அது வளைந்துவிட்டதே! பாண்டியர் வேந்தர்க்கும் வேந்தராவர்; உலகெலாம் நிழல்செய்யும் ஒப்பற்ற மதிக்குடையர், வரலாற்றில் மிக்கவர் என்பரே! அந்தோ! பாண்டியர்தம் அப்பெருங் கொற்றம் ஒரு பெண்முன் உருக்குலைந்து போயிற்றே! பாண்டியர் பகை நாட்டு மன்னர்க்குக் கொடியவரே எனினும், தன் நாட்டு மக்கட்குத் தண்ணளி புரிபவர் என்பரே; அந்தோ! அவர் குடைநிழலும் கொடுமை யுடையதாகி விட்டதே! இவ்வளவுக்கும் காரணமாய்க் கையில் சிலம்பேந்தி, கொடுங்கோலன் குடிகளாகி விட்ட நம்மை அழிப்பான் வேண்டி, இம்மாநகரத்து விதிகளில் உலாவரும் இக்காரிகை நல்லாள், கடவுளும் வணங்கும் கடவுளாவாள்; உலகம் கண்டறியா ஒரு புதுத்தெய்வமாவள்” எனப் போற்றி அஞ்சிப் பணிவாராயினர்.

"அல்லல் உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி,

மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக்

களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது! இது என்கொல்?