பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ல் புலவர் கா. கோவிந்தன்

பாராட்டுக்குரியவராகிவிட்ட அக்குன்றக் குறவர் கண்ணகியைப் "பலர்தொழு பத்தினி” எனப் பெயர் சூட்டிப் பாராட்டுவதோடு,

"பாடுகம்வா வாழி தோழி! யாம் பாடுகம்: பாடுகம்வா வாழி தோழி! யாம் பாடுகம்,

கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத் தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்!"

எனப் பாடிப் பரவுவதும் செய்வாராயினர்.

7. கோவலன்

கண்ணகியைப் புலவர்கள் பாராட்டியிருக்கலாம்; அவர்கள், அவள்மீது ஒரு பெரும் காப்பியமே கூடப் பாடியிருக்கலாம்; துறவற நெறிபுக்க துரயோர்கள் அவளைத் துதிபாடியிருக்கலாம்; அவள்போலும் மங்கையர் நல்லார் பலர் பாராட்டி மாட்சியுறச் செய்திருக்கலாம்; நெய்தல் வளம் தலைமயங்கும் புகார் நகர்த்துப் பெருங்குடிச் செல்வர், பாலை நிலத்து மறவர், முல்லைக் காட்டு ஆயர், o மருதவளம் சான்ற மதுரை மாநகர மக்கள், மலைநாட்டுக் குறவர் என ஐந்நிலத்து மக்களும் அவளை அணங்கெனக் கொண்டு பரவி யிருக்கலாம்; நானிலத்து மக்களே போல் நாடாளும் முடிமன்னர்களும் அவள் அடி பணிந்திருக்கலாம்; கன்னித் தமிழகத்து மட்டுமே யல்லாமல், கடல் கடந்த நாட்டுக் காவலர்களும் அவளைக் கடவுளாக்கி யிருக்கலாம். என்றாலும், கொண்ட கணவனால், அவள்