பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் ஒ 89

கைவிடப் பட்டவள்தானே; அவன் பாராட்டைப் பெறத் தவறி யவள்தானே?

"தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர், இனிது எனக் கணவன் உண்டலின், நுண்ணதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே." என்பதுபோல், ஒர் உயர்குல மகளுக்கு உண்மையான பாராட்டு, அவள் கணவன் தரும் பாராட்டு ஒன்று மட்டுமே யாகும். அப் பாராட்டைப் பெறத்தவறிய ஒருத்தி உலகத்தார் அனைவராலும் பாராட்டத்தக்க பெருநிலை பெற்றாலும் பயன் இல்லை. ஆகவே, கோவலனால் கைவிடப்பட்டவளாகவே, கண்ணகி பாராட்டுக்கு உரியவளாகாள் எனக் கூறலாம் என்றால், அதற்கு இடமில்லை. அவள் கணவன், அவளை அளவிறந்து பாராட்டியுள்ளான். அவள் புறக் கோலத்தை மட்டுமேயல்லாமல், அவள் அகநலனையும் அறிந்து பாராட்டியுள்ளான்.

நன்று. கண்ணகியைக் கோவலன் பாராட்டி யுள்ளான் என்றே கொண்டாலும், அது அவளுக்குச் சிறப்பளிப்பதாகாது. கணவன் பாராட்டு காரிகை யர்க்குப் பெருமை தருவது, அக் கணவன் நாட்டவர் போற்றும் நல்லவனாகிய வழியேயாம். அங்ங்னமன்றி, அவன் ஊரும் உலகமும் ஒரு சேரப் பழிக்கும் ஒழுக்கக் கேடனாயின், அத்தகைய கணவன் பாராட்டு ஒருத்திக்கு உயர்வளிப்பதினும், இழிவே தரும். கோவலன் அத்தகைய பழிமிகு வாழ்வுடையவ னாதலின், அவன் ப்ாராட்டு அவளுக்குப் புகழ் அளிப்ப