பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புலவர் கா. கோவிந்தன்

தாகாது; மாறாகப் பொன்றாப் பழிதருவதே யாம் என்று கூறலாமோ எனின், அக்குறைபாட்டிற்கும் இடமில்லை.

f

நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக் குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொ திரிதரு மரபின் கோவலன் போல *. இளிவாய் வண்டினொடு இன்னிள வேனிலொடு

மலயமாருதம் திரிதரு மறுகு" -

- சிலம்பு. 5. 199-203.

எனக் கோவலனைத் தென்றலுக்கு உவமை காட்டிக் கூறுமுகத்தான், கோவலனுடைய பரத்தைமையொழுக் கத்தை, இளங்கோவடிகளார் வன்மையாகக் கண்டித் துள்ளார் என்பது உண்மை. ஆனால், உயிரோடு உடன் தோன்றி, قتيل 9ےl அழியுங்காறும் உடன் இருப்பதாகிய உயர்ந்த காதல் உணர்வுடையராகாது, கணப்போதில் தோன்றிக் கணப்போதில் அழிவதாகிய காமவெறி பிடித்தலையும் கழிகாமுக இளைஞர்கள், ஆடவர்க்கு அவர் விரும்பும் இளம் பரத்தையர்களைத் தேர்ந்து கொண்டு வந்து தரும் பாணரோடும் பரத்தரோடும் கூடிக் காமவேட்டையாடுதலே கருத்தாக நகரப் பெருந்தெருவுகளில் திரிவது பழிக்கத்தக்க பெருங் குற்றமே யெனினும், அதுவும் ஒருவகை ஒழுக்கமே என்ற உணர்வு நிலவிய காலத்தில், அவ்வுணர்வு வேர் ஊன்றிக்கிடந்த ஒரு குலத்தில் பிறந்தவன் கோவலன் ஆதலின், அது, அவன் குற்றமன்று; அவன், அக் குலத்தில் பிறந்த குற்றம். ஆகவே, பழிக்கவேண்டுவது அவன் குலமேயல்லது, அவன் அல்லன். -