பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் ஆ 91

பிறந்த குடியின் பண்பு தன்னையும் பற்றிக் கொண்ட காரணத்தால், மேற்கொண்ட பரத்தையர் தொடர்பையும், பழியுடையது எனப் பிற்காலத்தே உணர்ந்து,

"சலம் புணர் கொள்கைச் சலதியொ டாடிக்

குலந்தரு வான் பொருட் குன்றம் தொலைந்த

லம்படு காணக்கரும்." இ டு நாணுத்தரு - சிலம்பு 9 69-71.

என அவ்வொழுக்கத்தையே பழிக்கும் உயர்வோனாகி விட்ட கோவலன்பால், அமைந்து கிடந்த அரிய பெரிய பண்புகள் அளவிறந்தனவாம்.

தன் வணிகர் குலத்துவந்த முன்னோன் ஒருவன், கடல் கடந்த நாட்டு வாணிகம் கருதி ஊர்ந்து சென்ற கலம், கடலிடையே உடையக் கடலில் வீழ்ந்து கரைகாணாது கலங்கியபோது, தன் விஞ்சையால் அவன் விழுமம் தீர்த்தது மணிமேகலா தெய்வம் என்பதால், அத்தெய்வத்தின் பெயரைத் தன் மகளுக்குச் சூட்டிப் பெருமை செய்த நன்றறி நல் உள்ளம் உடையவன் கோவலன். -

மகள் பிறந்த நாள் விழாவன்று, தான் அளிக்கும் கொடைப் பொருள் கொள்வான் வேண்டிவந்த, முதியோன் ஒருவனை, மழகளிறு ஒன்று பற்றிக் கொண்டது கண்ட அளவே, திடுமெனப் பாய்ந்து அம்முதியோனை விடுவித்து, அக்களிற்றின் மதம் அடக்கிய கருணை மறமுடையான் கோவலன்.