பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புலவர் கா. கோவிந்தன்

கழிபெரும் பாவம் செய்துவிட்டமையால் கணவனால் கைவிடப்பட்டாள் ஒருத்திக்காக, அப் பாவம் போக்கும் கழுவாயாகத் தன் பொருள் கொண்டு தானம் பல செய்து, அவள் பாவத்தையும் துடைத்து, அவள் கணவனோடு சேர்த்து அவள் வாழ்வு மலரவும், வகை செய்த வான்புகழ் வளம் உடையான் கோவலன்.

பூத சதுக்கத்துப் பூதத்தின் கைப்பட்டு உயிரிழக்கப் போகும் ஒரு மகனின் தாய்படும் துயர்காணப் பொறாது, அப்பூதத்தின் முன்சென்று, தன்னுயிர் கொண்டு, அம்மகன் உயிர் விடுமாறு மன்றாடிக் கேட்கவும், பூதம் அது முறையன்று என மறுத்துவிடவே, அத்தாயையும், அவள் பெரும் சுற்றத்தையும் பல்லாண்டு புரந்த நல்லறத் தலைவன் கோவலன்.

இளமை யுணர்ச்சியின் வேகத்தால் உந்தப்பட்டு, காதல் மனைவியைக் கைவிட்டுக் காதற் பரத்தையின் மனைபுகுவதும், அப்பரத்தையின் உள்ளத் துய்மை யையும் ஐயுற்று, அவளையும் கைவிட்டுப் போதலும் போலும் குற்றங்கள் பல புரிந்துளான் கோவலன் என்றாலும், பின்னர்த் தன் பிழையுணர்ந்து இரங்கும் உயர்குணமும் அவன்பால் அமைந்திருந்தது.

- மதுரை மாநகரத்துப் புறநகரில் தங்கியிருந்த போது, மாநகருள் புகுந்து வணிகர் சிலரைக் கண்டுவரச் செல்லும் முன்னர், கவுந்தி அடிகளைப் பணிந்து, 'அம்மையிர்! ஒழுக்க நெறி கைவிட்டு, இழுக்குடையே னாகி, இல்லறச் செல்வியாம் இவளை எல்லையிலாத்