பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 93

துயர்க்குள்ளாக்கியதோடு, முன்பின் அறியா இடத்தில் அலையவும் பண்ணிய என் சிறுமை கண்டு இரங்கு கிறது என் உள்ளம்.

"நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி, -

நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த அறியாத் தேயத்து ஆரிடை உழந்து சிறுமையுற்றேன்." - - சிலம்பு. 4: 17-20.

எனக் கூறியதும்,

ஆயர் சேரியில் கண்ணகி ஆக்கிப்படைத்த அறுசுவை உணவுண்டு, அவள் காற்சிலம்பை விற்பான் வேண்டி, மாநகர்க்குச் செல்லும் முன்னர், கண்ணகியை அருகழைத்து, "அன்பிற்கினாயாளே! பயனில் சொல் பாராட்டும் மக்கட்பதடிகளோடும், புதமலர் தேடித் திரியும் வண்டேபோல், புதுப் புது மகளிரைத் தேடி அலையும் காமுகரோடும், வன்சொல் அல்லது இன்சொல் வழங்கியறியாக் கும்பலோடும் கூடிக் கடமை மறந்து, ஒழுக்க நெறி கைவிட்ட எனக்கும், இனி உய்யும் வழி உளதமோ? பெற்ற தாய் தந்தையர்க்கு ஒரு மகன் ஆற்ற வேண்டிய கடமைகளைக் கைவிட்டேன். ஆண்டால் இளையளே யாயினும், அறிவால் முதியோளாகிய உன்னையும் சிறுமைக்கு உள்ளாக்கி னேன்; அங்ங்னமாகவும், மதுரை செல்வோம்; புறப் படுக! என்றதும் என் பின் புறப்பட்டு விட்டனையே; உன்னை என்னெனப் புகழ்வேன்!” -

"வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்