பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ல் புலவர் கா. கோவிந்தன்

பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக் கொன்றேற்கு நன்னெறி உண்டோ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்; வழுவெனும் பாரேன்." - சிலம்பு. 16; 63-69.

எனக் கூறியதும்,

- உணர்ச்சிக்கு அடிமையாகும் உரமிலா உள்ளம் உடைமையால், மாதவியின் தூய காதலை மதியாது,

அவளை,

"மாயப்ப்ொய் பலகட்டும் மாயத்தாள்" என்றும்,

"ஆடல் மகளே யாதலின், ஆயிழை! பாடுபெற்றன. அப் பைந்தொடி தனக்கு."

. - சிலம்பு. 8; 108-110. என்றும் அவளைப் பழி தூற்றிய கோவலன், மதுரை செல் வழியில் கோசிகமானிபால், "மாதவி தீதுடை யாள் அல்லள், தீது செய்தவன் யானே"- -

"தன்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என்த்து என்றே எய்தியது உணர்ந்து" -

. -சிலம்பு. 13: 94-95.

767 உணர்ந்து கூறியதும், செய்த பிழைக்கு இரங்கும் கோவலன் பேருள்ளத்திற்குச் சான்றுகளாம்.

இவ்வாறு செய்த பிழைக்கிரங்கும் பெரும் பண்புடையனாதலோடு, பிறர் துயர்க்கிரங்கும பேரருள் உள்ளமும் உடைய உரவோனாகிய கோவலனைக்