பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் இ 95

கணவனாகக் கொண்டதோடு, அவன் பாராட்டைப் பெறும் மனையறத் தலைவியாகவும் மாண்புற்றாள் கண்ணகி. - -

மணமுடித்து முதன் முதலாக மங்கல நல்லமளி மீது இருக்கின்றனர் இருவரும். அந்நிலையில் கண்ணகியின் புறக்கோல நலத்தில் அறிவு மயங்கிப் போன கோவலன், மூன்றாம் பிறைத் திங்களை நிகர்க்கும் நுதல், இரண்டு பெரிய கரும்பு வில்கள் போல் காட்சி நல்கும் புருவம், சிறுத்த இடை, வேல்நிகர் விழிகள், மயிலையும் தோற்றோடப் பண்ணும் சாயல், கிளி மொழியையும் வெல்லும் மழலை ஆகியவற்றைப் பாராட்டிவிட்டு, "மாதரசே! மங்கல அணி உன்னைப் பேரழகு செய்வதாகவும், உன்னைப் புனைந்துவிடும் பேதை மகளிர், அஃது அறியாது, வேறு சில அணிகளையும் உனக்கு அணிவித்தது யாது பயன் கருதியோ? கருங்கூந்தலில், கற்பொழுக்கம் கருதி, நீ சூடியிருக்கும் சில மலரே உனக்குச் சிறப்பளிக்கப் போதுவதாகவும், பன்னிற மலர் பல கொண்டு கட்டிய பெரிய மாலையை உனக்குச் குட்ட அப்பணி மகளிர், அம்மலர் மாலைபால் கொண்டிருக்கும் உறவுதான் என்னவோ? உன் அழகிய கூந்தலுக்கு அகிற்புகை யூட்டல் ஒன்றே போதுவதாகவும், அவர்கள். அதற்கு மேலும் மான்மதச் சாந்தைப் பூச, அச்சாந்தின் மீது அவர்க்குள்ள அருள் உள்ளம்தான் என்னவோ? மார்பில், தொய்யிற் குழம்பு கொண்டு கோலம் புனைந்தது ஒன்றே போதுவதாகவும், அதற்குமேலும்