பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஒ. புலவர் கா. கோவிந்தன்

முத்து வடங்களை அணிய, அவர்க்கு அவ்வடத்திடம் உள்ள உரிமைதான் என்னவோ? மங்கல அணியும், ஒருசில மலரும், அகிற்புகையும், தொய்யிற்குழம்பும் என்ற இவையே பெரும்பாரமாக, அவை பொறுக்க மாட்டாது, உன் நுதல் வியர்ப்பதாகவும், இடை தளருவதாகவும், அஃதறியாது, பலவணியும், பெரு மாலையும், மான்மதச் சாந்தும், முத்துச் சரமும் பூட்ட, அவர்கள் அறிவு பேதுற்றுப் போயினதோ? மேனியின் நிறநலத்தால் மாசறு பொன்னொப்பாய்; மென்மை நலத்தால் வலம்புரி முத்தொப்பாய்; மன நலத்தால் குற்றந்தீர் மணப்பொருள் ஒப்பாய்; இனிமையால் கரும்பு ஒப்பாய், மொழி நலத்தால் தேன் ஒப்பாய்; கண்டார் மயக்கும் பேரழகால் கொல்லிப் பாவை ஒப்பவளே; கடைக்கண் ஒளியால், கண்டார் உயிர்காக்கும் அருமருந்தனையாய், வணிகப் பெருங் குடியில் வந்தவளே, உன்னை, மலையிடைப் பிறவா மாணிக்கம் என்பேனோ? அலை ஒயா ஆழ்கடல் பிறவா அமிழ்தம் என்பேனோ? யாழிடைப் பிறவா இசையெனப் புகழ்வனோ? உன்னைப் புகழ அறியேன்" எனப் பலபடப் பாராட்டியுள்ளதைக் காட்டினால், அப்பாராட்டெல்லாம், கானும் பொருள் மீது காணும் அக்கணமே கருத்திழந்து போகும் உரம் அற்ற உள்ளத் தவனாகிய . கோவலன், கண்ணகியை அவளின் புனைநல வடிவில், மங்கல நல்லமளிமீது முதன் முறையாகக் கண்டதும் கொண்ட காமவேட்கை மிகுதியால் கருத்திழந்து, கூறியவை ஆதலின், அப்