பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இ. புலவர் கா. கோவிந்தன்

மாதவியைக் கைவிட்டு அவள் மனைபுகுந்த தன்னை நகைமுகம் காட்டி வரவேற்றதோடு, மாதவிக்குத் தரத்தக்க மாநிதி இல்லைமையால்தான் வந்து விட்டானோ என்ற நினைப்பால், தன் காற் சிலம்பையே அளிக்க முன்வந்தாள். கைப்பிடித்த மனைவியைக் கைவிட்டதோடு, பெற்ற தாய் தந்தையரைப் பேண மறந்த பொறுப்பிலியை நம்பிப் புதுவிடம் போவதா என நினையாது, மதுரைக்குப் புறப்படுக என்றதுமே புறப்பட்டுவிட்டாள். மண வறையில் வைத்து மகிழ்விக்க மறந்தவனாயிற்றே; என நினையாது, என் துயர் தீர்க்கும் வழித்துணையாதல் ஒன்றே குறியாகக் காட்டுவழியைக் கொடிய கோடையில், கால் கொப்புளிக்கக் கடந்துவந்தாள். இவ்வாறு, அவன் உள்ளம், கண்ணகியின் அப்பண்பு நலங்களையெல்லாம் எண்ணி எண்ணி இன்புற் றிருந்தது, ஆகவே, அவள், அவனுக்கு அணித்தாக இருப்பவும், அவனுக்கு அவள் அகநலமல்லது, புறநலம் எதுவும் தோன்றாவாயின. அதனால், அவன் அவள் அகநலப் பெருமைகளைப் பாராட்டத் தொடங்கி விட்டான். -

"தன்னைப் பெற்ற தாய்தந்தை, தன்னைத் தம் மருமகளாகக் கொண்ட என் தாய்தந்தையர் ஆகிய அனைவரையும் மறந்தாள். தன் குறிப்பறிந்து பணி புரியக் காத்து நிற்கும் குற்றேவல் மகளிரை மறந்தாள். அம்புலி காட்டி, இன்ப அன்புப் பாடல் பாடி, ஊட்டியும் ஆட்டியும், உறங்கப் பண்ணியும் பேணி