பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 மா தவம் புரிவாள் 1.1.2 சில மரங்கள் அறிமுகம் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள அவ்வைந்து செய்திகளுள், பூவாது காய்க்கும் மரம், பூத்தும் காய்க்காத மரம் ஆகிய வற்றை மட்டும் இவண் எடுத்துக் கொள்வோம். பூத்தாலும் காயா மரங்கள், பாதிரி மரம் முதலாயின என்று சிறுபஞ்ச மூல உரையாசிரியர் பு. சி. புன்னைவன நாதனார் கூறுகின் றார். பூத்தும் காய்க்காத மரங்கள், வேங்கை மரம், அவகோசி மரம் முதலியன என்று சாம்பசிவம்பிள்ளை தம் தமிழ்-ஆங்கில அகர முதலியில் கூறியுள்ளார். 'சண்பகமும் வேங்கையும் வண்டுணா மலர் மரம்' என்று திவாகர நிகண்டு (4-81) தெரிவிக்கிறது; பூத்தும் காய்க்காத மரங் களை விட்டு, பூவாமலே காய்க்கும் மரங்களைப் பற்றி இனி மிக்க அக்கறை எடுத்துக் கொள்வோமாக. இக்கட்டுரை பூவாது காய்க்கும் மரங்களைப் பற்றியதே யாகும். 2. பூவா மரப் பெயர்கள் பூக்காது காய்க்கும் மரங்கட்கு உரிய பெயர்களாக, கோளி, கோளிகம், ஆடலை, ஆண்டலை, கடகம், பூவா மரம், புட்ப சூனியம், அதிசயப் புட்பி, அபுட்ப பலம், பூவாது காய்க்கும் மரம் முதலிய பெயர்கள் பல்வேறு அகர முதலிகளிற் கூறப்பட்டுள்ளன, அத்தி மரம், ஆல மரம், அரச மரம் முதலியன, பூவாது காய்க்கும் மரங்களாக அகர முதலிகளிற் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலியன என்பதில், பலா மரம், அன்னாசி ஆகியவற்றையும் நாம் அடக்கிக் கொள்ளலாம். - 3. பெயர்க் காரணம் புட்ப சூனியம், அதிசயப் புட்பி, அபுட்ப பலம் என்னும் வடமொழிப் பெயர்கள், பூ இல்லாதது என்னும் பொருள்