சுந்தர. சண்முகனார் 101 உடைமை எளிதில் விளங்கும். கோளி என்னும் சொல்லுக்கு, கொள்ளுபவன் - (தானாகப்) பொருள் விளங்கிக் கொள்ளு பவன் என்று பொருள் கூறலாம். 'கோளாளன் என்பான் மறவாதான்' என்னும் திரிகடுக நூல் (12) ஆட்சியும், "கொள்வோன் கொள்வகை', 'உரை கோளாளன்’ என்னும் நன்னூல் (36, 37) ஆட்சியும் காண்க. எனவே, பூ இல்லாமலே தாமாகக் காய்க்கும் மரங்கள் கோளி, கோளிகம என்னும் பெயர் பெற்றிருக்கலாம். பொதுவாக, பூவில் காயாக மாறும் பகுதி, அண்டகோசம் (Gynaecium) எனப்படும் பெண்பாகமே. பூக்காமல் காய்க்கும் மரங்கள், பெண் தன்மை இன்றி, ஆண் தன்மையே மிக்குடையன என்னும் கருத்தில் ஆடலை, ஆண்டலை என்னும் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கலாம். இப்பெயர்கள் ஆளுமை, ஆண்மை, ஆள்தல் என்னும் வேர்ப் பொருள் உடையன என்று கூறலாம். சரியான காரணம் தெரியாத காலத்தில் இப்பெயர்கள் வைக்கப்பட்டிருக்கலாம். அத்தி, ஆல், அரசு, பலா, அன்னாசி ஆகிய மரங்கட்குப் பூ உண்டா - இல்லையா? பூத்துக் காய்க்கின்றனவா - பூவாமற் காய்க்கின்றனவா? - என்று ஆராய்ந்து காண வேண்டும். இம் மரங்களின் பேராளி (பிரதிநிதி) மரமாக அத்தி மரத்தை எடுத்துக் கொள்வோம். அது குறித்து ஆராய்ந்து காணும் முடிபுகளைக் கொண்டு மற்ற மரங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். எனவே, அத்தியிலிருந்து விளக்கத்தைத் தொடங்குவோமாக. 4. 'அத்தி பூத்தாற் போல....” "அத்தி பூத்தாற்போல இருக்கிறதே உங்கள் வருகை' என்று ஒருவர் மற்றொருவரை நோக்கிக் கேட்பதை உலகியலில் எப்போதோ சில நேரங்களில் கண்டிருக்கிறோம்.
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
