பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மா தவம் புரிவாள் பாடு உண்டு. வித்தை காட்டுபவன் போல் இதனை வளர்த்துவதேன்? ஒரு முடிவுக்கு வந்து விடுவோம். அத்திப் பூவேதான் காய்-அத்திக்காயேதான் பூ பூவும் காயும் ஒன்றே. அத்திப்பூ மொட்டுபோல் இருந்தபடியே காயாகி விடுகிறது. முல்லை முதலில் மொக்காக-மொட்டாக இருந்து, பின்னர் மொட்டு உடைந்து இதழ்கள் விரிந்து மலர்ந்து விடுகிறது. அது போல் இல்லாமல், அத்தி கடைசிவரையும் மொட்டு போலவே உருண்டையாய்க் காட்கியளிக்கிறது. அந்த ஒர் உருண்டைக்குள்ளே பல பூக்கள் உள்ளன. அவையாவும் உருண்டைக்குள்ளேயே பூத்துக் காய்த்துக் கனிந்து விடுகின்றன. எனவே, ஓர் அத்திக்காய் என்பது பல அத்திப் பூக்களிள் முதிர்ந்த மாற்றமேயாகும். இதனை விருந்த பரிணாம சமூகக்கனி என்பர் மர (தாவர) நூலார். 5. கடகம் கடகம் என்னும் சொல்லுக்கு வலயம், உருளை என்னும் பொருள்கள் உண்டு. வண்டி உருளை (சக்கரம்) வலயமாக உருள்வது தானே. இம்மரங்களின் மலர்களும் உருளை போல உருளக் கூடியனவே. எனவே, இக்காரணங் கருதி இவற்றிற்குக் கடகம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக் Ꮬ ©ᏝᎢ L0 , 6. இலக்கியக் கோளி பூவாது காய்க்கும் மரங்களைக் குறிக்கும் மேற்கூறிய பெயர்களேயன்றி, இன்னும், பெயர்க் காரணம் தெளிவாகத் தெரியாதனவும் தெரிந்தனவுமாயிருக்கிற வேறு சில பெயர் களும் உள்ளன. கோசா மரம், சிரடகம், சய முகத்தி, வன பத்தியம், கொழிஞ்சி, கேசவாரிட்டம், கோனி முதலியன அவை.