4. மடிக் குருவி 1. சார்பினால் பெற்ற பெயர்கள் 1.1.அ. மடி 'மூத்தவரே, ஒரு வாய்க்கு அரைக் கோடு இருந்தால் கொடு' - என்பார் ஒருவர். உடனே, மூத்தவர் மடி யிலிருந்து பாதி வெற்றிலையை எடுத்துக் கொடுப்பார். இத்தகைய காட்சியைச் சிற்றுார்களில் காணலாம். மூத்தவர் என்றால், அவர் வீட்டுக்கு அவர் மூத்த பிள்ளை என்பது பொருள்; அதனால் அவர் பெயர் சொல்லி அழைக்கப்படாமல், மூத்தவர் என்னும் இடைக்காலப் பெயராலேயே அழைக்கப்படுகிறார். அவரிடம் வெற்றிலை பெறுபவர் "மூத்தவரே என மதிப்போடு விளிக்கிறார். வெற்றிலை பெற வேண்டுமே! அரைக்கோடு என்பது அரை வெற்றிலை. இவர் அரைக் கோடு கேட்பது, பிறரிடம் நிரம்பப் பெறக்கூடாது என்னும் பெருந்தன்மையினால் அன்று; இவர் ஒவ்வொரு முறையிலும் அரை வெற்றிலைக்கு மேல் போட்டுப் பழக்கம் இல்லை. அவ்வளவு ஏழமைச் சிக்கனம். மூத்தவரும் வெற்றிலை களைப் பாதிப் பாதியாகத்தான் கிழித்து வைத்திருப்பார். அவரும் ஒரு தடவையில் அரைக்கோட்டுக்குமேல் போட்டுப் பழக்கமில்லை; மற்றும் அரைக் கோட்டுக்குமேல் கேட்டும் கொடுத்தும் பழக்கம் இல்லை. இது சிலரது நிலைமை.
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
