பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 137 என்பது பாடல் பகுதி. இருவேறு மண்டிலம் என்பது ஞாயிறையும் திங்களையும் குறிக்கும். நேமி = சக்கரம். வளை - சங்கு. மணிமேகலை கிழக்கே தெரியும் முழுத்திங்களும் மேற்கே சென்று மறைந்து கொண்டிருக்கும் ஞாயிறும், புகார் நகர் என்னும் பெண்ணுக்கு இரண்டு தோடுகளாகப் (காதணிகளாக) பொலிவு செய்கின்றன என்னும் கருத்து மணிமேகலையில் சொல்லப்பட்டுள்ளது. 'புலவரை பிறந்த புகாரெனும் பூங்கொடி ... குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும் குடதிசை மருங்கிற் சென்று வீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டோடு பொன்தோடாக எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்' (5—199—119–122) என்பது பாடல் பகுதி ஞாயிறும் திங்களும் ஒரே நேரத்தில் தெரியும் காட்சி ஆங்கிலப் பாடல் ஒன்றிலும் ஒவியப் படுத்தப்பட்டுள்ளது: ஆங்கிலப் பாடல் கிரேக்கப் படைத் தலைவனாகிய யூலிசெஸ் (ulysses) என்பான், தன் கப்பல் படை மறவர்களுடன், அனட்டோலியா எனப்படும் ஆசியாமைனரில் உள்ள டிராய் (Troy) நகரை வென்று, இத்தாகா (Ithaea) என்னும் தன் சொந்த இடத்திற்குத் திரும்பும் வழியில் “Gavrrill–6iv o són sofissir stavlò’ (Land of Lotos Eaters) என்னும் தீவில் தங்க நேர்ந்தது. மாலை நேரம். அனைவரும் கடற்கரையில் மஞ்சள் நிற மண்மேல் ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடையே அமர்ந்திருந்தார்