பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 139 நட்சத்திரம் தோன்றி - என்ற எண்ணமும் பெயருமே, ‘LL-QLs) @gmaoa G|Birá6 go.” (Reflecting Telescope) பிற்காலத்தில் தோன்றுவதற்குத் தொடக்கப் புள்ளியாக (Starting Point) மக்களினத்தின் உள்ளத்தில் அரும்பிப் பின்னர்ப் பெரிதாக மலர்ந்தது என்று கூறலாம். பொன்னாங் கண்ணிக்குப் பகல் நட்சத்திரம் தோன்றி' என்பது பயனால் பெற்ற பெயராகும். பயனால் பெற்ற மற்ற பெயர்களையும் இனிக் காண்போம்: கண்ணியும் காணியும் இந்தச் செடிக்கு உரிய பொன்னாங் கண்ணி, பொன் னாங்காணி என்னும் இரு பெயர்கட்கும் இறுதியில் உள்ள கண்ணி, காணி என்னுஞ் சொற்கள் கண் தொடர்பான பொருள் உடையனவாகவே தெரிகிறது. கண்ணி என்ப தற்கு, பூங்கொத்து, பூமாலை, வலை முதலிய பொருள்கன் பொருந்தா. கண்ணுக்கு ஏற்றது கண்ணி எனக்கோடலே பொருந்தும். கண்ணுக்கு நலம் பயக்கும் மற்றொரு செடி கரிசலாங் கண்ணி என்பது. இஃதும் கண்ணி என முடிதல் காண்க. இவ்விரண்டிற்கும் கண்ணி' என்னும் தனிப் பெயரும் உண்டு. கண்ணுக்கு நலம் பயப்பதால் இவ்விரண் டிற்குமே கண்ணுக்கு இணியாள் என்ற பெயர் உண்டு. இருப்பினும், கண்ணுக்கு இனிமை தருவதில் கரிசலாங் கண்ணியினும் பொன்னாங் கண்ணியே சிறந்த தாகும். அடுத்து, காணி என்பதற்கு, காண்பது காணி காணச் செய்வது காணி என்று பொருள் கொள்ளலாம். கண் ணொளியை மிகுத்துக் காணச் செய்கிற தன்றோ ! கண்ணுக்கு அணி 'கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்'. (575)