பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ம்ா தவம் புரிவாள் திரேக சித்தி - சித்தி இவ்வாறு நோய்களைப் போக்கி, உடலுக்கு (திரேகத் திற்கு) நலம் செய்வதால் இதற்குத் திரேக சித்தி' என்ற பெயரும் உண்டு. சித்தி என்றால் நன்மை சித்திப்பது-நன்மை கைகூடுவது என்று பொருளாம். இக்கீரை நன்மை செய்வ தால், இதற்குச் சித்தி என்னும் தனிச் சொற் பெயர் வைத்திய மலையகராதியில் வழங்கப்பட்டுள்ளது. இதில் தங்கச் சத்து இருப்பதோடு, 6% புரோட்டின் உள்ளது; 100 கிராமில் 16 மில்லிகிராம் இரும்புச் சத்தும் உண்டு. இவற்றால் உடலுக்கு நலம் உண்டாகிறது. பெளதிக மங்கை பெளதிக மங்கை என்னும் பெயர், திரேக சித்தி என்பதன் பெயர்க் காரணத்தோடு ஒத்த காரணத்தது. பெளதிகம் என்றால் பூதம் தொடர்பானது ஆகும், விண், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐந்து பூதங்களால் ஆனவையே உலகில் உள்ளன. உலகம் என்பது இந்த ஐந்து பூதங்களின் தொகுப்பே; அதனால், பெளதிகம் என்பதற்கு உலகம் என்ற பொருள் உண்டு. இந்த ஐந்து பூதங்களும் திரிந்து புதுவடிவம் பெற்றதே உடம்பு. 'அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது' என்பது முன்னோர் மொழி: அண்டம்=உலகம். பிண்டம்=உடம்பு. இதனால், உடம்பை, வடமொழியில், 'பஞ்சபூத பரிணாம சரீரம் என்பர். அதாவது, ஐம் பூதங்களின் திரிபாக்கம் உடம்பு' என்பது அதன் தமிழ்ப் பொருள். 'வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்' (271) என்னும் குறள், உடம்புக்குள் ஐந்து பூதங்கள் இருப்பதை அறிவிப்பது காண்க. எனவேதான், உடம்புக்குப் பெளதிகம்