பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 159 வெட்டப்படுவாய் - கிழிக்கப்படுவாய் (வாதுவாய்)' என மறக்குடி மகளொருத்தி கூறுவதாக இப்பாடல் அமைந் துள்ளது. எனவே, "வாது வர்ணம் என்பதற்கு, அறுக்கப் பட்ட வெட்டப்பட்ட பொன் துண்டு என்பது பொருளாம். பெரிய புராணத்தில் உள்ள 'மச்சம் வெட்டிக் கைக் கொண்டு' என்ற பகுதி முன்னர் எடுத்துக்காட்டப்பட் டுள்ளது. அதே மச்சந்தான் இந்த வாதுவர்ணம் என்பது. எனவே, இது சொல்விளையாட்டாகப் பொன்னாங்கண்ணிக் குப் பொருந்தும். வெறும் பொன் என்றில்லாமல், வெட்டப்பட்ட - அறுக்கப்பட்ட பொன் என்று கூறுவானேன்? - என்று வினவலாம். அதற்கும் காரணம் உண்டு. முருங்கைக் கீரையை ஒவ்வோர் இலையாகப் பறிப்பதோ கத்திகொண்டு அறுப்பதோ செய்வதில்லை; சொரட்டுக்கோல் என்னும் கருவியால் சிறு சிறு கணுவாக ஒடிப்பார்கள். தென்னார்க் காடு மாவட்டத்தில் முருங்கைக் கீரை ஒடித்தல்' என்று கூறுவதே பல இடங்களில் வழக்கமாயுள்ளது. பசலைக் கீரை, தூதுவளைக் கீரை போன்றவற்றை இலை இலை யாகப் பறிப்பார்கள். ஆனால், அறுகீரை (அரைக்கீரை), பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றைக் கத்தியால் . அரிவாளால் அறுப்பதே வழக்கம். அதனால், அறுபடுகின்ற பொன் கீரை என்னும் பொருளில் வாது வர்ணம் என்ற பெயர் தரப்பட்டுள்ளது. வரிக்கண்ணி வரிக்கண்ணியும் சொல் விளையாட்டே. கண்ணி என்பது பொன்னாங்கண்ணியைக் குறிக்கும். வரி' என்பது பொன்னைக் குறிக்கும். பெண்களின் தோளிலும் மார்பிலும் படரும் பொன் னிறமான தேமலுக்குப் பொன், வரி, பசலை, சுணங்கு,