பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மா தவம் புரிவாள் திதலை என்னும் பெயர்கள் உண்டு. சில இலக்கியச் சான்றுகள் வருக. (சங்க இலக்கியங்கள் பலவற்றில் பற்பல இடங்களில் இவை வந்துள்ளன) கலித்தொகை - 22-19 'அடர்பொன் அவிர் ஏய்க்கும் அவ்வரி' நச்சினார்க்கினியர் உரை: தகடாகிய பொன்னினது விளக்கத்தை யொக்கும் அழகிய சுணங்கு'.. இங்கே வரி' என்பதற்குப் பொன்னிறம் என்னும் பொருள் உள்ளமை காண்க. சீவக சிந்தாமணி - 1530 'வயங்கு பொன்னின்ற நீலமாமணி முலையினாளே' முலையிலும் முலையைச் சுற்றியும் பொன்னிறப் பசலை படர்ந்துள்ளது. நீலமாமணி என்பது, முலைக் காம்பு நீல நிறமாயிருப்பதைக் குறிக்கிறது. இங்கே வரி (பசலை) பொன் எனக் கூறப்பட்டிருப்பது காண்க. கந்தபுராணம் - இரணியன் யுத்தப் படலம் 'பசலை சேர் முலை மங்கையர் விழிக்கணையாய' புறநானூறு - 155 * 'பாழுர் நெருஞ்சிப் பசலை வான்பூ' நெருஞ்சிப்பூ பொன்னிறமாயிருக்கும். அப் பொன்னிறம் இங்கே பசலை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க. ஐங்குறுநூறு 'பசுமலர்ச் சுணங்கின் மடவரல்' (76) 'திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ (231)