பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மா தவம் புரிவாள் பொன்னாங்கண்ணிக்கு வரிக்கண்ணி என்பது சொல் விளையாட்டுப் பெயராயிற்று. இடத்தால் பெற்ற பெயர் மேனாட்டுக் கண்ணி பொன்னாங்கண்ணி ஏழாயிரம் அடி உயரம் உள்ள மேடான மலைப்பாங்கிலும் நீர்வளம் இருந்தால் செழிக்கக் கூடியது என்பதனால், இதனை மேல் நாட்டுக் (மேட்டுப் பகுதிக்) கண்ணி என்னும் பெயரால் குறிப்பிடுவதாகக் கருத முடியாது. இந்த இனத்தில் சிவப்புப் பொன்னாங் கண்ணி என ஒன்று உண்டு. இது பார்ப்பதற்கு அழகாய், மேல்நாட்டுப் பெண்ணின் நிறம் உடையதால் இப்பெயர் பெற்றதாகச் சொல்லத் தோன்றும், ஆனால் இந்தச் சிவப்புப் பொன்னாங்கண்ணியைச் சில இடங்களில், "இலண்டன் கீரை' என்னும் பெயரால் சுட்டுகின்றனர். 'சீமைப் பொன்னாங்கண்ணி’ என்னும் பெயரும் இதற்கு உண்டு. எனவே இதனை, மேனாட்டிலிருந்து வந்ததால் இப்பெயர் பெற்றது என்றே கொள்ள வேண்டும். இடத்தால் பெற்ற பெயராகும் இது. சுவைச் சிறப்பு பொன்னாங்கண்ணி பொதுவாக உடலுக்கும் சிறப் பாகக் கண்ணுக்கும் நலம் பயப்பதுடன், உண்பதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். வைத்திய மூலிகை அகராதியில், 'பொன்னாங் காணிக்குப் புளியிட்டுக் கடைந்தால் அண்ணாக்கெல்லாம் தித்திக்கும்' (அண்ணாக்கு = உள்நாக்கு) என்பதாக இதன் சுவை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.