பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 163 'பொன்னாங்கண்ணியைப் புளியிட்டுக் கடைந்தால் அண்ணா மலையாருக்கு அடிநாக்குக்கும் பத்தாது உண்ணா முலையாளுக்கு உள்நாக்குக்கும் பத்தாது” என்பது மக்கள் வழக்கில் உள்ள பாடல். புளியோதரை விரும்பிகட்குப் புளிபோட்டுக் கடைய வேண்டும். பத்தியத் திற்குப் புளியில்லாமல் சமைத்து உண்பதே சாலச் சிறந்தது. பெயர்களும் நூல்களும் பொன்னாங்கண்ணிக்கு உரிய பெயர்களுள், சீதளி என்பது மலையகராதியிலும் சீதை என்பது தேரையர் பாடலிலும், சித்தி - சானகி என்பன வைத்திய மலை யகராதியிலும், மச்சி யாச்சி மூலிகை வைத்திய அகராதியிலும், காணி - மேனாட்டுக்கண்ணி - கண்ணுக்கு இணியாள் - மச்சிக் கண்ணி - மச்சியாங்கண்ணி என்பவை சித்த வைத்திய அகராதியிலும், மச்சியாச்சி யாழ்ப்பாண அகராதியிலும், வான நாடி ஜூபிலி தமிழ்ப் பேரகராதியிலும், மற்ற பெயர்கள் சாம்பசிவம்பிள்ளை தமிழ் - ஆங்கில அகரமுதலியிலும் சொற்பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளன.