சுந்தர. சண்முகனார் 167 5. பொருள் தெளிவாகப் புரியாத குழப்பத்தினால் திரிபு ஏற்படலாம். அதாவது, ஒரு சரக்குக்குப் பதிலாக வேறொரு சரக்கைப் பயன்படுத்தி விடலாம். 6. கானக்குதிரை, ஆனைக்கன்று - முதலியன தெளி வாகப் பொருள் புரிவன என்றாலும், மருத்துவ அறிவோடு இலக்கிய நூலறிவும் உடையோர்க்கே, அத்தெளிவு கைவரக் கூடியதாயிருக்கும். மற்றவர்க்கு இயலக்கூடியதன்று. எல்லா ருக்கும் தெரிய வேண்டும் என்பது இக்கால நோக்கமாகும். 7. பல பெயர்கள் வடமொழியில் வைக்கப்பட்டுள்ளன. தாய்மொழியாகிய தமிழையே இன்னும் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத மக்களுக்கு வடமொழிப் பெயர்கள் புரிய வழியேயில்லை. 8. கடவுளாகிய சிவனுக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றுள் சில பெயர்கள் ஒரு மர இனத்துக்கும், வேறுசில பெயர்கள் வேறொரு மர இனத்திற்கும் இடப்பட்டுள்ளன. இப்பெயர்களுள் எந்தப் பெயரையும் ஒரளவு தொடர்புள்ள மர இனத்துக்கும் வைக்கலாம் போல் தோன்றுகிறது. இந்த முயற்சி அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை. 9. மதத் தொடர்புடைய - புராணக்கதை தொடர் புடைய சில பெயர்கள் மதக் காழ்ப்பை உண்டாக்கலாம். 10. இந்துமதத் தொடர்பான பெயர்கள், இந்துமதப் புராண - இலக்கியங்களைக் கற்றோர்க்கன்றி, அவற்றைக் கற்காத இந்துக்களுக்கும் மற்ற மதத்தினர்க்கும் புரிய வாய்ப்பில்லை. 11. சொல் விளையாட்டுப் பெயர்களுள் சில, முழுப் பொருத்தம் உடையனவாயில்லை. 12. சில ஒப்புமைப் பெயர்கள் முற்றிலும் பொருந்துவன என்று சொல்வதற்கில்லை.
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
