பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மா தவம் புரிவாள் மருத்துவத்தை நம்பாமல் மிகவும் எளிமையாய் நினைக்கக் கூடும் என்ற உளவியல் காரணமாகவும், புதுப்பெயர்கள் இடப்பட்டுள்ளன. கலைச் சுவை காரணமாகவும் புதுப் பெயர்கள் இடப்பட்டுள்ளன. 4.3 5.3 செய்யுள் நூல் ஈண்டு மற்றுமோர் உண்மையை மறப்பதற்கில்லை. பண்டைக் காலத்தில் கணக்கு, மருத்துவம், கணி (சோதிடம்) முதலிய அனைத்துக் கலைகளும் செய்யுளாலேயே இயற்றப்பட்டன. செய்யுள் என்றதும், எதுகை மோனை நயம், கற்பனைக் கலைநயம் முதலிய நயங்கள் இயற்கை யாக இடம் பெற்றுவிடும். எனவே, மருத்துவ நூல்களில், மர இனங்கட்குப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பெயர்கள் கற்பிக்கப்பட்டு இடப்பட்டுள்ளன. இதனால், செய்யுளிலுள்ள சில பெயர்கள், ஐயப்பாடும் திரியும் குழப்பமும் இன்றி, எளிதில் தெளிவாகப் பொருள் புரிந்து கொள்ள முடியா நிலையில் இருப்பது இயற்கையே. செய்யுள்-இலக்கியப் படிப்பில், சில பகுதிகளை ஒரு தோற்றமாக உய்த்துணர்ந்து கொள்ள வேண்டியும் இருக்கலாம். 4.4. இலக்கியப் பயிற்சி தக்க இலக்கியப் பயிற்சியின் வாயிலாகத் தமிழில் உள்ள அருஞ்சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் புரிந்து கொள்ளலாம். சொந்த இலக்கியப் பயிற்சித் திறன் இல்லாதார், உரை நூல்களைக் கொண்டும், மர இனப் பெயர் வைப்புக் கலை' என்னும் இந்நூல் போன்ற பெயர்க் காரண விளக்க நூல்களாலும், வேலூர் கண்ணப்பரின் 'நம் நாட்டு மூலிகைகள்' போன்ற நூல்களாலும் பொருள் புரிந்து பயப் பெறலாம். எல்லா மதத்தினருமே, பிற