iT4 மா தவம் புரிவாள் 6. கலை நூல் இந்நூலில் இதுகாறுங் கூறப்பட்டு வந்துள்ள செய்தி களால் கிடைக்கும் கலை சார்பான தொகுப்புப் பொதுக் கருத்தாவது பயன், பண்பு, செயல், ஆகியவை காரணமாக வைக்கப்பட்டுள்ள மர இனங்களின் பெயர்களில் பயன் கலையைக் காணலாம். வடிவம், சார்பு, உவமை (ஒப்புமை) உயர்திணைப்பெயர் (மக்கள் பெயர் போன்றவை), தெய்வப் பெயர், சொல் விளையாட்டு ஆகியவை தொடர்பாக இடப்பட்டுள்ள மர இனப் பெயர்களில் கவின் கலையைக் காணலாம். எனவேதான், இந்நூலுக்கு, மர இனப்பெயர் வைப்புக் கலை' என்னும் பட்டப் பெயர் சூட்டப் பெற்றது. இத்தகைய பெயர்களை இட்டுள்ள நம் முன்னோர்களின் பல துறைக் கலையறிவினை எவ்வளவு போற்றினாலும் தகும்! 7. நூற்பயன் மர இனப் பெயர்க் காரண விளக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூலைக் கற்பதால், மர இனங்களால் உண்டாகும் பல்வேறு பயன்களை அறிந்து கொள்ளலாம். மற்றும், பொதுவான மர நூல் (தாவர நூல்) அறிவும் கிடைக்கும். எனவே, இந்தப் படிப்பினை, மர இனங்களின் இன்றி யமையாமையை உணர்ந்து, இருக்கும் மர இனங்களைப் போற்றிக் காக்கவும், புதிதாக மர இனங்களை வைத்துப் பயிராக்கி வளர்க்கவும் தூண்டலாம். இதனால், மருத்துவம், வேளாண்மை, பொது அறிவியல் ஆகிய துறைகள் மேலும் வளர வாய்ப்பு உண்டாகலாம். வளர்க மர இனம்! மர இனத்தின் பயனைப் பெற்று வாழ்க மக்கள் இனம்! இத்தகைய நூல்களால் தமிழ் மொழி வளம் பெறுக!
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/184
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
