பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மா தவம் புரிவாள் இதுகாறுங் கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குமிடத்து, அருகன் வாகனம்' என்னும் பெயரோடு, திருக்குறளில் உள்ள மலர்மிசை யேகினான்' என்னும் பெயரை முடிச்சு போடுதல் சிறப்புடைத் தாகாது என்பது புலனாகலாம். 1.10.6 கமலலுர்தி அருகன் வாகனம் என்னும் பெயருக்கு ஒத்த பொருள் உடையதாகக் கமல ஆர்தி என்னும் பெயர் நிகண்டுகளில் அருகனுக்குத் தரப்பட்டுள்ளது. சில: திவாகர நிகண்டு 'காமற் காய்ந்தோன், கமல வூர்தி... அருகற்கு இன்னும் அனந்தம் பெயரே' (11) சூடாமணி நிகண்டு - - -

பண்ணவன், கமல் ஆர்தி, பரமேட்டி, காதி

. . வென்றோன் அருகன் பேராகும்' (2 & 5) பிங்கல நிகண்டிலும் இப்பெயர் கூறப்பட்டுள்ளது. கமல ஆர்தி (கமலம் + ஊர்தி) என்பதற்கு, தாமரையை வாகனமாக உடையவன் என்பது பொருள். நான்முகன், திருமகள், கலைமகள் ஆகியோருக்குத் தாமரை இருக்கையாக உள்ளதெனில், அருகனுக்கு அது ஊர்தியாக இருக்கிறதாம். இந்து மதத் தெய்வங்களுக்கு ஊர்திகள் குறிப்பிடப் பட்டிருப்பதுபோல், அருகனுக்கும் ஒர் ஊர்தி சொல்லப் பட்டுள்ளது என்ற அளவோடு அமைதல் நலம். மாதவம் புரிவாள் என்பது முதல் அருகன் வாகனம் என்பது வரையுள்ள பெயர்கள், தாமரைக்குச் சார்பினால் பெறப்பட்டவையாகும்.