பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மர் தவம் புரிவாள் 2.5 சதபத்திரி நூறு இதழ்களையுடைய தாமரை சதபத்திரி (திவா.நி) 2.6 சகஸ்ர பத்திரம் சகஸ்ரம் = ஆயிரம். ஆயிரம் இதழ்களையுடையது சகஸ்ர பத்திரம் (சா. சி. பி.) இஃதும் சினையாகு பெயரே. 2.7 அஞ்சித பத்திரி அஞ்சிதம் என்பதற்கு வளைவு-வணக்கம் என்ற பொருள் உண்டு. வளைந்த இலைகளையுடைய ஒருவகைத் தாமரை அஞ்சித பத்திரி (சா.சி.பி.) எனப்படும். அஞ்சித பத்திரி = வளைந்த இலைகளுள்ள ஓர்விதைத் தாமரை) - a lotus with curved leaves – «Tergy &T. G. 17. G. gyópg). அஞ்சித்தல் என்பதற்குப் பூசனை செய்தல் என்ற பொருளும் உண்டு. எனவே, பூசனைக்கு-கடவுள் வழிபாட்டுக்கு உரிய மலர் எனவும் பொருள் கொள்ளலாம். இ. சா: 'அஞ்சித்தல் சொற்ற பூசனை யடைவுமாம்' (காஞ்சிப் புராணம்-திருவே-36) திருமால் தாமரை மலர்களால் சிவனுக்குப் பூசனை புரிந்ததான புராணக்கதை முன்பு ஒரிடத்தில் கூறப்பட் டிருப்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. 2.8 முளரி தாமரை இலைக்காம்பில் முள் போன்ற ஒருவகை உறுப்புகள் இருப்பதால் முளரி என்னும் பெயர் உண்டா யிற்று. இ. சா. சீவகசிந்தாமணி முளரி முகநாக முளை எயிறு - (2870) நச்சர் உரை: தாமரைப் பூப்போலும் புகரையுடைத் தாகிய முகத்தை யுடைய யானையினது முளைத்த எயிறு'