பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 41 காந்தள் என்பது மலர். புணர்ச்சி வேட்கையைத் தூண்டும் காமனது ஐந்து மலர்க்கணைகளுள் தாமரைப் பூவும் ஒன் றாதலின், இரதி காந்தள் (சா.சி.பி.) என்னும் பெயர் நல்கப்பட்டது. இஃதும் பண்பாகு பெயரே. 4.6 அருங்கலம் இந்தப் பெயர் (சா.சி.பி.) அப்பர் தேவாரம் - நமச்சி வாயத் திருப்பதிகம் - இரண்டாம் பாடலிலிருந்து எடுக்கப் பட்டது. முழுப்பாடல் வருமாறு: 'பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை, ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்; கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது; நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே' பூக்களுக்குள் அழகு மிக்க பொருளாக - கிடைத்தற்கு அரிய அணிகலன் போன்றதாகப் பொலிவு பெற்று விளங் குவது பொங்கு (மலர்ச்சி பொங்கும்) தாமரை மலராகும் - என்று தேவாரம் கூறுகிறது. மலர்கட்குள் தாமரைப் பெற்றிருக்கும் சிறப்புத் தலைமைப் பண்பு கருதி, அதற்கு 'அருங்கலம்' என்னும் பெயர் பண்பாகு பெயராய் அளிக்கப் பட்டுள்ளது. 5. சொல் விளையாட்டுப் பெயர்கள் 5.1 சிவ சத்தி பகிர்ந்தான் இப்பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ளது. சிவ சத்தி என்பதற்கு, சிவனது ஆற்றல் எனப் பொருள் செய்து, அந்த ஆற்றலைத் தாமரை பகிர்ந்து கொண்டது என்பதாகப் பெயர்க் காரணம் கூற முடியாது. அல்லது, சிவனது சத்தி நெருப்பு - அதைத் தாமரை பகிர்ந்து கொண்டது - என்றும் கூற முடியாது. குப்பைமேனி வெப்பம் தரும் பொருள் ஆதலின், நெருப்புக் கடவுளாகிய