பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மா தவம் புரிவாள் அக்கினி மந்தங்கள் உண்டாம்; அன்றே மலர்த் திருவத் திக்கினில் இராள் எனவே தேர்என்பது பாடல். இவ்வளவு பழுதுடைய தாமரை மற்ற வற்றிற்கு எவ்வாறு தலைமை தாங்க வியலும்? இருப்பினும், இப்பழுதுகள் பொருட்படுத்தப்படாமல் தாமரைக்கு நாயகச் சிறப்பு தரப்பட்டுள்ளது. பழுது-நாயகம் என்பன முரணான சொற்கள். அங்கன மிருந்தும், இரண்டும் இணைக்கப் பட்டுப் பழுதுடை நாயகம்' என்னும் பெயர் தாமரைக்குத் தரப்பட்டிருப்பது ஒருவகைச் சொல் விளையாட்டு எனலாம். 5.2.3 இடப் பெருமை பழுதுடை நாயகம் என்னும் பெயருக்கு இன்னொரு வகையிலும் தீர்வு காணலாம். பழுது என்னும் சொல்லுக்கு இடம் என்னும் பொருள் உண்டென அகராதி நிகண்டு கூறு கிறது. தாமரை, நான்முகன், திருமகள், கலைமகள், அருகன், புத்தன் ஆகியோருக்குத் தங்கும் இடமாக இருந்து, மற்ற பூக்களினும் சிறப்புற்றிருப்பதால் பழுதுடை நாயகம்' என்னும் பெயர் தரப்பட்டதாகவும் கூறலாம். 5.3 நீர் நிதி - இப் பெயரும் சா.சி.பி. அகர முதலியில் உள்ளது. நிதி = செல்வம். நீரில் உள்ள செல்வம் நீர் நிதியாகும். தாமரை செல்வமாவது யங்ஙனம்? நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் தாமரை-என்னும் பெயர்கள் மிக மிகப் பெரிய அளவைக் காட்டும் எண்ணுப் பெயர்களாகும். கமலம், தாமரை என்பன எண்ணுப் பெயர்களெனில் அதே பொருள் உடைய பதுமம் என்பதும் பேரெண்ணைக் குறிக்கும் பெயரேயாகும். இதற்கு இலக்கியச் சான்று காண்போம்: