சுந்தர. சண்முகனார் 53 ஏரினும் நன்றால் எரு இடுதல்' (1038) என்பன வள்ளுவர் அறிவுரைகளாம். இதனால் எருவின் இன்றியமையாமை புலப்படும். இவ்வாறாகக் குப்பை, தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு உயர்ந்தது. கழிவுப் பொருள்களின் குவியலுக்கு ஏற்பட்ட குப்பை என்னும் பெயர், மற்ற பொருள்களின் குவியலுக்கும் வழங்கப்படலாயிற்று. மணல் மேட்டுக்கும் இலைசருகு முதலியவற்றின் குவிய லுக்கும் குப்பை என்னும் பெயர் தரப்பட்டது. விளைந்த நெல் முதலிய பயிர் வகைகளின் தாள்கள் அறுக்கப்பட்டுக் கும்பலாய்ப் போடப்பட்ட குவியலும் குப்பை எனப்படலாயிற்று. நாளடைவில் அடித்துத் தூற்றப்பட்ட நெல் குவியலும் குப்பையாயிற்று. பின்னர், வரகு, ஆம்பல், இறால் மீன், உப்பு, பாக்கு, அகில், சந்தனம், இரத்தினம், ஒன்பான் மணிகள் (நவ இரத்தின மணிகள்) பல்வேறு மாபெரு நிதியங்கள் முதலிய வற்றின் குவியலும் குப்பை எனப்பட்டன. குப்பைக்கு அடித்த நல்ல காலத்தைப் பாருங்கள்! இவற்றிற்கு இலக்கியச் சான்றுகள் வேண்டுமா? இதோ? குப்பை இழிந்ததாய் - மட்டமானதாய் - அருவருப்பான கழிவுப் பொருள்களின் தொகுப்பாய்க் கருதப்படுவதற்கு உரிய சான்று: காலடியார். 341-பகையியல்-கீழ்மை 'கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெறினும் குப்பை கிளைப்புஒவாக் கோழிபோல் - மிக்க
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
