பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 55 குறிப்பிட்ட குறுந்தொகைப் புலவர் ஒருவர், வெறுங் கோழி என்று கூறாமல், 'குப்பைக் கோழித் தனிப்போர் போல' (305-அடி 6) எனக் குப்பைக் கோழி என்று குப்பையைக் கோழிக்கு அடை மொழியாக்கி யுள்ளார். கோழிப் போர் பற்றிக் கூறியதால் இவர் குப்பைக் கோழியார் எனப் பெயர் வழங்கப்பட்டுள்ளார். குப்பையின் வரலாற்றில், தொடக்கக் காலத்திலிருந்து அதற்கு உள்ள இழிவு இவண் எடுத்துக் காட்டப்பட்டது. இனி அடுத்த படிகட்குச் செல்லலாம். குவியல் என்னும் பொருள் பெற்ற குப்பை என்னும் பெயர் மணல்மேட்டைக் குறிக்கும் சான்று: 'குப்பை வெண்மணல் ஏறி (நற்றிணை-291-3) இலை சருகுக் குவியலுக்கு: பீரை நாறிய சுரையிவர் மருங்கின் ஈத்து இலைக் குப்பை ஏறி (புறம்-116-6,7) அடித்துத் தூற்றாத நெற் கதிரின் குவியலுக்கு:கூனிக் குயத்தின் வாய்நெல் அரிந்து சூடு கோடாகப் பிறக்கி நாடொறும் குன்றெனக் குவைஇய குன்றாகக் குப்பை' (பொருநராற்றுப்படை-242-44) கருத்து: சூடு = அடித்துத் தூற்றாத நெற் கதிர். 'குப்பை என்னும் சொல் பெற்ற குவியல்' என்னும் பொருள் மாற்ற வரலாற்றினைக் குவைஇய குப்பை" என்னும் தொடர் அறிவிக்கிறது. அடித்து மாளாதது என்பதைக் குன்றாக் குப்பை என்பது தெரிவிக்கிறது. , மேரு (மலை) என்னும்படி திரட்டின தொலையாத நெற்