சுந்தர. சண்முகனார் 59 1. தொழு - கலித்தொகை. 101-9 'ஏறு தொழுஉப் புகுத்தனர் இயைபுடன் ஒருங்கு' நச்சர் உரை, தொழுஉப் புகுத்தனர் = தொழு விடத்தே புகுத விட்டார். 2. தொழுவறை - அகநானூறு - 253:16, 17 'துாறுகாழ் வல்சியர் தொழுவறை வெளவிக் கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்' 3. தொழுவம் - குறுந்தொகை. 190-7 'பல்லான் தொழுவத்து ஒருமணிக் குரலே' எனவே, தொழுவத்துக் கழிவாகிய சாணம் முதலியன தொழு உரம் எனப் பெயர் பெற்றது. வயலுக்கு உரமாக இடுவதற் கென்றே, சிற்றுார்களில் மாட்டுச் சாணத்தை ஓரிடத்தில் கொட்டிக் கொண்டுவந்து குப்பையாகக் குவிப்பர். இந்தச் சாணம் மக்கிய குப்பைமேட்டிலும் மேனிச் செடி நன்கு செழித்து வளரும். சாணகம் என்பதும் சாணம் என்னும் பொருள் கொண்ட சொல்லே. இலக்கியச் சான்று: 1. இறையனார் அகப்பொருள்-3 உரை வழிப்போகா நின்றான் ஒருவன், பிழைத்துச் சேறானும் சாணகமானும் மிதித்த விடத்துக் காலைக் கழிஇப் பாதுகாத்துத் தன் இல்லம் புக்கது போல’’ சாணகச் சாறு என்பது, ஆவின் (பசுவின்) ஐம்பயன் ஆகும். இதனைப் பஞ்ச கவியம்' என்பர். ஆவின் பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவையே இந்த ஐம்பயன் ஆகும். இலக்கியச் சான்று: 2. ஈடு 4.1.10 'சாணகச் சாற்றோ பாதி சுத்தி மாத்திரத்தையே உயஜீவித்து'
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
