பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மர் தவம் புரிவாள் 2.9 வினை விகாசச்செடி இப்பெயர் சித்த மருத்துவ அகராதியில் தரப் பட்டுள்ளது. விகாசம் என்பது, மலர்ச்சி - மகிழ்வு - ஒளி (பளபளப்பு) என்றெல்லாம் பொருள்படும். எனவே, பள பளப்பான மேனி என்னும் பொருளில் விகாசம் என்னும் சொல் அமைந்திருப்பதாகக் கொள்ளலாம். வினை விகாசம் என்பதற்கு, பளபளக்குஞ் செயல் தோற்றம் உடையது என்று பொருள் கொள்ளலாம். இஃதும் வடிவில் வந்த பெயரே. வினை என்பதற்கு, தீர்வு, பரிகாரச் செயல் என்னும் பொருள் உண்டு. இலக்குவன் நாக பாசத்தால் கட்டுண்ண, வானரர் வீடணனை நோக்கி வினவுவதாக உள்ள, கம்பராமாயணம்-நாகபாசப் படலப் பாடல் பகுதியாகிய வீடணன் முகத்தை நோக்கி வினையுண்டே யிதனுக் கென்பர்' (உ.வே.சா. பதிப்பு-184) என்பது காண்க. எனவே, இங்கு, வினை என்பதற்குப் பரிகாரமாகிய மருத்துவம் எனப் பொருள் கொண்டு, மருத்துவத்துக்கு உதவும் மேனிச் (விகாசச்) செடி வினை விகாசச் செடி என்று பொருள் காணலாம். இபபொருளின் படி, இது பயனால் வந்த பெயராகக் கொள்ள வேண்டும். 2.10 மூன்றிலை மேனிச்செடி சா. சி. பி. அகராதியில் இப்பெயர் கொடுக்கப் பட்டுள்ளது. குப்பைமேனியின் பெண் பூவில் மூன்று புற இதழ்கள் இருக்கும். சூலகம் மூன்று அறைகள் கொண்டதுகனி மூன்றாக வெடிக்கும் - என்னும் இந்த மூவகை மூன்று களால் மூன்றிலை மேனிச்செடி என்ற பெயர் இதற்கு ஏற்படவில்லை. நம் முன்னோர் நுண்ணிதின் உற்று நோக்கி இதற்கு இப்பெயரைத் தந்துள்ளார்கள். உரிய மூன்று வருமாறு: