66 ம்ா தவம் புரிவாள் ' வல்லியும் புல்லும் பூடு மரமுதல் மருந்தென் றாகும்' - (4-64) என்பது சூடாமணி நிகண்டு நூற்பா. இங்கே 'தனி' என்பதற்குப் பொருள் காண வேண்டும். தனியாயிருக்கும் செடி என்பதுபோலப் பொருள் ஒன்றும் கூற முடியாது. பூக்களில், மகரந்தப் பை (Anther) உள்ள கேசரக் குழாய் (Staminal tube) ஆண் பாகம் என்றும், காய் காய்க்கும் அண்ட கோசம் (GYNAECIUM) என்னும் பகுதி பெண் பாகம் என்றும் கருதப்படும். சில மர இனங்களில், ஒரே பூவில் ஆண் பாகம், பெண் பாகம் ஆகிய இரண்டும் இருக்கும். சில இனங்களில், ஆண்யூ தனியாகவும் பெண்பூ தனியாகவும் இருக்கும். குப்பைமேனிச் செடியில், கேசரப் பகுதியாகிய ஆண் பூவும், அண்ட கோசப் பகுதியாகிய பெண் பூவும் தனித் தனியாகவே இருக்கும். அதனால் இது தனிவல்லி' என்னும் பெயர் தரப்பட்டது எனலாம். குப்பைமேனியின் பூக் கதிரிலே ஆண்பூ மேல் பகுதியிலும் பெண்பூ கீழ்ப் பகுதி யிலும் இருக்கும். ஆண் பூ மேலே இருந்தால்தான், அதிலிருந்து மகரந்தப் பொடி (Pollen), கீழே உள்ள பெண் பூவில் விழ வாய்ப்பாயிருக்குமல்லவா? இந்த அமைப்பு, gushansuffsir Gósio (Selection of Nature) -g,65th. தனிவல்லிப் பெருமாள் என்பது, தனிவல்லியாக உள்ள பெருமாள் என மக்கட் பெயர் போலவோ அல்லது தெய்வப் பெயர் போலவோ வேடிக்கையாகத் தரப்பட்டுள்ளது எனக் கொள்ளல் வேண்டும். 2-15 அண்டகம்: அண்டகம் என்னும் பெயரொன்று வைத்திய மலை யகராதியில் உள்ளது. பெயர்க் காரணம் விளங்கவில்லை.
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/68
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
