பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மா தவம் புரிவாள் ஈண்டு, திவ்யப் பிரபந்தத்தில் உள்ள 'நீலக் கருநில மேக நியாயற்கு' (2689) என்னும் பகுதி ஒப்பு நோக்கற் பற்று. 5. மூன்று நிறங்களும்: க. ரா. அயோத்தியா காண்டம் கங்கைப் படலம்-உ. வே. சா. பதிப்பு-620 "மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன்' இப்பாடலில், இராமன் வடிவு, கரிய மையாகவும், பச்சை மரகத மணியாகவும், நீலக் கடலாகவும், கரிய மழை முகிலாகவும் தோன்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. காணப் படும் பொருளைப் பொறுத்தும், அப்பொருள் ஊடுருவும் பொருளைப் பொறுத்தும், காண்பவரின் கண்ணைப் பொறுத்தும் நிறம் அமைவதுண்டு என்னும் ஒரு சார் அறிவியல் கொள்கை ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று. 6. நிகண்டுகள்: பல்வேறு நிகண்டுகளில், திருமாலின் நிறம் தொடர்பான பெயர்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன:- கருங்கடல் வண்ணன், கரியவன், கரியோன், மேக வண்ணன், கொண்டல் வண்ணன் கடல் வண்ணன், பூவை வண்ணன்-முதலியனவாம் எனவே, இலக்கிய அகச் சான்றுகளின் அடிப்படையில், பச்சை-நீலம்-கருமை ஆகியவற்றை ஒரளவு ஒத்த நிறமாகக் கொள்ளவேண்டும். அவ்வாறு கொள்ளின், வெண்பச்சை நிறமுள்ள குப்பை மேனிச் செடிக்கு, வெண்கருமை என்னும் பொருளுடைய மயில மேனிச் செடி என்னும் பெயர் பொருந்துவதாகும்.