சுந்தர. சண்முகனார் 81 சேத்துமப் பிணிகள் யாவற்றையும் போக்கி, உடல் நலத்தை உண்டு பண்ணும். 5.3. ஆனந்த வாதோதகம்: மேற்கூறியுள்ள மூன்று பாடல் பகுதிகளாலும், குப்பை மேனி வாதத்தைப் (வளிநோயைப்) போக்கும் என்பது புலனாகும். அதனால் இதற்கு 'ஆனந்த வாதோதகம்’ என்னும் பெயரும் சா.சி.பி. அகர முதலியில் தரப் பட்டுள்ளது. வாதோதகம் என்பதை வாதம் + உதகம் எனப் பிரிக்கலாம். உதகம் என்றால் நீர், குப்பை மேனிச் சாறு வாதத்தைப் போக்கி நலம் (ஆனந்தம்) செய்யும் என்பது கருத்து. குப்பை மேனியில் வெள்ளையும் உண்டு. வெண் குப்பை மேனிக்கு உரியதாக இப்பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. கலவைக் கீரை: குப்பை மேனி இலையை மிகுதியாக உண்ணலாகாது. சிறிதளவே உண்ணவேண்டும். இதைக் கலவைக் கீரையில் கலந்து உண்ணும் வழக்கம் உண்டு. முளைக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, கரிசலாங் கண்ணிக் கீரை, தூதுளைக் கீரை, சிறுகீரை, தும்பைக் கீரை, கீழா நெல்லிக் கீரை, வள்ளைக் கீரை, மூக்கிரட்டை, சாட்டறணை முதலியவற்றோடு குப்பை மேனிக் கீரையையும் கலந்து கடையல் (மசியல்) செய்தும் துவட்டியும் உண்ணுவது உண்டு. இத்தகைய கலப்புக் கீரைகள் கலவைக் கீரை எனப்படும். பிள்ளை பெற்ற பெண்கட்கு, நாட்டு மருத்துவ முறையில், கலவைக் கீரையை ஆக்கி உண்ணக் கொடுப்ப துண்டு.
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/83
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
