சுந்தர. சண்முகனார் 85 பூனை குப்பைமேனிச் செடியின் மேல் விழுந்து புரள்வதால், அது அச்செடியோடு பகை கொண்டு மோதுவது போலவும் - அல்லது - அதற்கு வணங்குவது போலவும் தோன்றுகிறது. உண்மையில் பகையோ வணக்கமோ ஒன்றுமில்லை. பூனை இவ்வாறு செய்வது குறிப்பிட்ட ஒரு பயனுக்காகவே என்று உய்த்துணர இடமுள்ளது. அஃதாவது:- குப்பைமேனியின் தொடர் பினால், புண், நச்சுக்கடி, தினவு ஆகியவை குணமாகும் என்ற கருத்து, தேரையர் குணபாட நூற் செய்யுளில் கூறப்பட்டுள்ளமை முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது புண், கடி, சொறி, நமைச்சல் ஆகியவற்றைக் குணப் படுத்திக் கொள்வதற்காகவே பூனை இவ்வாறு செய்கிறது என்பதே நமது உய்த்துணர்வாகும். 6.4 மாற்சால மோகினி இப்பெயரும் பூனை வணங்கி என்னும் பெயரோடு தொடர்புடையதே. மாற்சாலம் என்றால் பூனை: மோகினி என்றால், மோகம் கொள்ளச் செய்யும் பெண் என்பது பொருள். குப்பை மேனிச் செடி, பூனைக்குத் தன்னால் உண்டாகும் பயனால், அப் பூனையைத் தன்னை விரும்பும் படிச் செய்கிறது; இதனாலேயே மாற்சால மோகினி என்னும் பெயர் பெற்றது. ஆங்கிலப் பெயர் உட்பட மேற் கூறப் பட்டுள்ள நான்கு பெயர்களும் சார்பினால் பெறப்பட்டவை. 6.5 சுக துக்கம் சுக துக்கம் என்பதற்கு இன்ப துன்பம் என்று பொருளாம். ஆனால், சுக துக்கம்', 'சுக துக்கம் இரண்டும் அறியும் இலை என்பன குப்பை மேனிக்கு உரியனவாகச் சா.சி.பி. அகர முதலி அறிவிக்கிறது. இதற்கு உரிய
பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
