பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறைப்பதைக் காட்டுகிறது. அதாவது, இறைவனை இருள் மறைத்துள்ளது. ஞானிகளின் அறிவுரைகளை ஏற்றுப் பின்பற்றி நடந்தால், இருளை - அந்த மருளை அழிக்க முடியும், என்கிறார் திருவள்ளுவர். ஞானியர் அறிவு ரைகள் என்றால், சங் கராசாரியர் போன்றவர்களது இன அறிவுரைகள் கூறுவோரல்லர், திருவள்ளுவரே எங்களைத் தான் சுட்டுகிறாள் என்று, மறப்பினும் ஒத்துக் கொளலாகும்' என்ற 134-வது குறளையும், அறுதொழிலோன் நூன்மறப்பர் என்ற 560 வது கொடுங்கோன்மை அதிகாரச் சொற்களையும் அவர்கள், சான்றுக்கு இழ்ப்பார்கள். 'அந்தணர் என்பர் அறவோர் என்ற குறட் கருத்தால் மேற்கண்ட இனவெறியை எதிர்க் கிண்றார் திருவள்ளுவர். காரணம், 'மற்றெவவுயிாக்கும் குளிர்ந்த அருளைச் செலுத்தும் செந்தண்மை அந்த இனத்திற்கு இல்லையே' என்பது தான். கடவுள் என்ற பெயரை 'இறை என்று சுட்டுகிறோம். கடவுள் காப்பவர் அதனால் இறை எனப்படுகிறாள். அதே காக்கும் தொழில் மன்னனிடமும் அமைந்திருப்பதால், நாட்டின் காவலனும் இறை என்று கறப்படுகிறான். அதைத்தான் இறைமாட்சி என்ற அதிகாரத்தால் திருவள்ளுவர் விளக்குகிறார். நாட்டைக் காப்பவனை 'இறை என்று அழைப்பதைப் போல, வட்டைக் காக்கும் இல்லறக் காவலன் கொழுநன் என்ற சிறு தெய்வமாகின்றான். அதனால் தான், ‘தெய்வம் தொழா அள் என்ற குறளில் அந்தக் கருத்தைச் சுட்டுகிறாள் திருவள்ளுவர், தெய்வம் தொழுதற்குரிய எண்வகைப் பொருட்களான நிலம், நீர், தி, உயிர், காற்று, நிலா, சூரியன், புலனாய மைந்தன் என்ற படி முறைகளில், மண் முதல் வரிண் வரையு ள்ள ஐந்தும் பஞ்சபூத சக்திகளாகும். நிலா, சூரியன் இரண்டும் ஒளி வழங்கும் பொருட்களாக, தனிப்பட எங்கும் தோன்றுவன. இவற்றுக்கெல்லாம் மேம்படும் "இறை - வானுறை தெய்வமாகும். கணவன். மனைவி இருவரும் ஞான மெய்யடியார்களைத் தொழுபவர்கள். மனைவரிக்கு கணவன் உடனுறையும் தெய்வமாவான். பிற தெய வங்களாகிய சூரியன், நிலா, வானுறை தெயர் வம் ஆகியவற்றைத் தொழாமல், கணவனைத் தெய்வமாகத் தொழல் வேண்டும். தெய்வமாக எண்ணி வழிப்படல் வேண்டும். இது பாவனை பாவனைப் பயன், பாவிப்போர்க்கும், பாவரிக்கப்படும் பொருளுக்கும் வந்து சேருமாதலால், தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுல் என்ற பாவனை கறப்பட்டது. தொல்காப்பியர், 'இன்பமும் - பொருளும் அறனும் - என்றாங்கு அன்பொடுபுணர்ந்து ஐந்தினை மருங்கின் என்றாள். - - திருவள்ளுவர் பெருமான், தொல்காப்பியரால் மூன்றாவதாக எண்ணப் பட்ட 'அறத்தை', திருக்குறளின் முதலாவது பால் ஆக வைத்தார். அறமே வாழ்க்கைக்கு முதன்மையானது என்பதால், அவள்