பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உள்ளன. பொதுக் கடன்கள் மூலம் மாநில அரசுகள் நிதி திரட்டி, தங்கள் நிதி வளத்தைப் பெருக்கிக் கொள்வதிலும், அரசியலமைப்பின் 293-வது பிரிவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம் நேரடியாகவும், ரிசர்வ் பாங்கியின் மூலம் மறைமுகமாகவும், அக்கடன்கள் எந்த நிபத்தனைகளுக்கும் வரை யறைகட்கும் உட்பட்டுத் திரட்டப்படலாம் என கட்டுப்படுத்தும் உரிமையுடன் மத்திய ஒரு முறை மாநிலங்களின் நிதித்தேவைகளைப்பற்றி நிதிக்குழுக் களின் வாயிலாக நடுவு நிலையில் நின்று ஆராய வேண்டுமென்கிற ஏற்பாடும், அக்குழுக்களின் ஆய்வு வரம்பு குறித்து விதிக்கப்படும் பல்வேறு வரையறைகள் காரணமாக, மாநிலங்கள் மத்திய அரசினை அண்டி நிற்கும் நிலை பெருமளவில் குறைந்தபாடில்லை". அரசு விளங்குகிறது. ஐந்தாண்டுகட்கு அந்த நிதி நிலை அறிக்கையின் இறுதிப் பகுதியில் அண்ணா அவர்கள், அமைய "மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றிய மறு சிந்தனை தேவை என்பதனை இப்பேரவை அறியும். இன்றுள்ள உறவு, உள்ளத்துக்கு நிறைவு தருவதாக வேண்டும் என்ற நோக்கத்தை அனைவரும் வரவேற்பார்கள் என் பதில் ஐயமில்லை. இதுவரை வரிப்பங்கீடு, அதிகார வரம்பு, திட்ட நிதி ஒதுக்கீடு ஆகியவற்றிலே கிடைத்துள்ள அனுபவம், கசப்பு நிரம்பியதாக இருப்பதை எவரும் மறுத்திட இயலாது; இந்தக் கசப்பு நீங்கிடவும், கனிவு கிடைத்திடவுமான முறையில் தொடர் புகள் அமைந்திட வழி காண்பது உடனடிப் பிரச்சினையாகி விட்டி ருக்கிறது. இது குறித்து அச்சமோ, ஐயப்பாடோ அல்ல, தெளி வான சிந்தனையே தேவை. ஒருவருக்கொருவர் உள்ள நல்லெண் ணத்தினாலும், ஒருவரையொருவர் நன்கறிவதாலும் தோழமைத் தொடர்பு மகிழ்ச்சியும் பயனும் மிக்கதாக ஆக்கப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும்" என்று கூறியுள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும். அதன் பின்னர், 1969-ஆம் ஆண்டு "ஹோம் ரூல்" ஆங்கில ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதிய கடைசி கட்டுரையில் "அன்புள்ள தம்பி, நான் பதவியைத் தேடி பைத்தியம் பிடித்து அலைபவனுமல்ல ; காகிதத்தில் கூட்டாட்சியாகவும், நடைமுறையில் மத்தியில் அதிகாரக் குவிப்புக் கொண்டதாகவும் இருக்கிற ஒரு அரசி யல் சட்டத்தின் கீழ் முதலமைச்சராக இருப்பதற்கு மகிழ்ச்சி