பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 கொண்டிருப்பவனுமல்ல. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சல் ஏற்படுத்துவதும், டில்லியோடு சண்டை போடுவதும் தான் எனது நோக்கம் என்று-எனது நண்பர் ஈ.எம்.எஸ்.-ஐப் போல் - நான் பிரகடனம் செய்ய விரும்பவில்லை. அதனால் யாருக்கும் நன்மையில்லை. உண்மைதான்; சரியான பருவத் தில் ஒரு உறுதி ஏற்பட வேண்டுமென்பதுதான் முக்கியம். ஆனால் கூட்டாட்சி முறையைப்பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுப்பதை அதற்கு முன்னால் செய்ய வேண்டும். அந்தப் பணியில், அன்புத்தம்பி, உன்னுடைய உற்சாகமான ஒத்துழைப்பும், மனப்பூர்வமான பங்கேற்பும் எனக்குக் கிடைக்குமென்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை உண்டு. "பதவியில் இருப்பதின்மூலம், இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் கொல்லைப்புறமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு இரட்டை ஆட்சிதான் என்பதைச் சிந்திக்கக் கூடிய பொது மக்களின் கவனத்திற்கு தி. மு. க. கொண்டு வர முடியுமானால், அது உண்மையிலேயே அரசியல் உலகிற்குச் செய்யப்படும் குறிப்பிடத்தக்க உதவியாகும்" என்று எழுதிய கருத்துக்களின் அடிப்படையிலும் 1967-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8-ஆம் நாள் புதுடெல்லியில் செய்தி யாளர்கள் கூட்டத்தில், 'மாநிலங்களுக்குப்போதுமான அதிகாரங் களை வழங்கிவிட்டு; நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமை யையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவைகளை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டால் போதும்; இப்படி அதிகாரங்களைப் பங்கீடுசெய்வதற்கும், அரசியல் சட்டம் செயல்படுவதற்கும், உயர் அதிகார ஆணைக்குழு ஒன்றினை அமைக்கவேண்டும்" என்று அவர் தெரிவித்த கருத்துக்கு ஏற்பவும், 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் நாள் சட்டப்பேர வையில் நான் அறிவித்ததையொட்டி, நாட்டின் ஒருமைப் பாட்டுக்கு ஊறு நேராவண்ணம், மாநில சுயாட்சி அடிப்படையில் மத்திய மாநில உறவுகளை ஆராயுமாறு டாக்டர் இராஜமன்னார் தலைமையில், டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார், திரு. பி. சந் திரா ரெட்டி ஆகியோரைக் கொண்ட குழுவை 1969 செப்டம்பர் 22-ம் நாள் இந்த அரசு அமைத்தது. அதன் பிறகு 1971-ஆம் ஆண்டு தி. மு. கழகத்தின் தேர்தல் அறிக்கையில், "இந்திய அரசியல் முறை 'கூட்டாட்சி' முறை என்று வர்ணிக் கப்பட்டாலும், அந்தத் தராசு மத்திய அரசு பக்கம் அதிக பட்சம்