பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7 சாய்ந்திருப்பதால்; அதிகாரத் துறையிலும் நிதித் துறையிலும் மாநிலங்கள் செவ்வனே செயல்பட முடியாமல் தடைகள் இருப்ப தால்; அதேநேரம் இந்தியா வலுப்பெற்றதாக இருக்க வேண்டு மென்கிற இலட்சியத்திற்கும் ஊறு தேடாமல்; எந்தெந்தத் துறைகளில் வலுவான இந்தியா இயங்குவதற்காக மத்திய அரசு செயல்பட வேண்டுமோ அந்த அதிகாரங்களை மட்டும் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டு; இதர அதிகாரங்கள் மாநிலங்களுக்கு. வழங்கப்படும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தி; மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கருதுகிறோம். இந்த நோக்கத் தோடு நமது அரசு அமைத்த வல்லுநர் குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு; அந்த அடிப்படையில் அகில இந்திய ரீதியில் மாநில சுயாட்சி இயக்கத்திற்கான ஆதரவு திரட்டும் இயக் கத்தைக் கழகம் மேற்கொள்ளும். அரசியல் துறை அதிகாரங்களும், நிதித்துறை அதிகாரங் களும் மாநிலங்களுக்கு மேலும் தேவை என்று கேட்பது; மாநிலங் களில் இருப்போர் அதிக அதிகாரங்களை நுகர வேண்டுமென்கிற ஆசையால் அல்ல; மாநில அரசுகள் மக்களுக்கு நெருங்கிய நிலையில் இருப்பதால் அந்த அதிகாரங்களை மத்திய அரசிடமிருந்து மேற் கொண்ட பிறகே எதிர்பார்க்கும் விதத்தில் மக்களுக்குத் தொண் டாற்ற முடியும்-என்பதால்தான், மாநில சுயாட்சி கோருகிறோம் என்பதையும் தெளிவாக்க விரும்புகிறோம்". என்று குறிப்பிட்டிருப்பதை யாரும் மறந்திருக்க இயலாது. 1972-ஆம் ஆண்டு மைசூர் மாநில ஸ்தாபன காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "Congress will fight in a determined manner for greater autonomy for the State and against all discrimination and step-motherly treatment by the Centre. [மத்திய அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மை, பாரபட்சம் இவற்றுக்கு எதிராகவும், மாநிலத்திற்கு அதிக மான சுயாட்சி பெறுவதற்காகவும் காங்கிரஸ் கட்சி உறுதி யாகப் போராடும்.] என்று குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமுடையதென்று நான் கருதுகின்றேன். 1971-ஆம் ஆண்டு மே 27-ஆம் நாள் இராஜமன்னார் குழுவின் அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கை இந்திய நாட்டுத்தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.