பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9 autonomy should be understood as a request for more efficient management of the country's resources, as a means to enable the Centre to be strong in areas of vital national concern, as a method of enabling the minimum demands of our people to be met in the quickest time and in the most efficient manner." (நமது நாடு போன்ற பெரிய நாட்டின் தற்காலப் பொருளா தாரச் சிக்கல்களை சமாளிப்பதெனில் அதிகாரங்கள் பரவலாக இருப்பது அத்தியாவசியமானது. நாங்கள் எழுப்பியுள்ள மாநில சுயாட்சி கோரிக்கையின் நியாயத்தினை இக்கோணத் திலிருந்து சாணவேண்டும். நாட்டின் வளங்களை இன்னும் திறமையாக நிர்வகிப்பதற்கான வேண்டுகோளாகவும். நாட்டின் ஆதாரமான காரியங்களில் மத்திய அரசு வலு வுடன் இயங்குவதற்சான சாதனமாகவும், மிகத் திறம்படவும் மிக விரைவிலும் நம் மக்களின் குறைந்த பட்சத் தேவைகள் கிடைப்பதற்கான வழிவகையாகவுமே மாநில சுயாட்சிக் கோரிக்கையைக் கொள்ளவேண்டும்] என்ற அளவில் இந்த அரசின் கொள்கையைத் இருக்கின்றேன். தெளிவாக்கி டாக்டர் ராஜமன்னார் குழுவின் அறிக்கையை வரிக்கு வரி இந்த அரசு ஏற்றுக்கொள்ளா விட்டாலும், அரசின் கொள்கை, வெற்றிகரமாகப் படருவதற்கான கொழுகொம்பாகவே அந்த அறிக்கையை நாம் கருதுகின்றோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் மிக நிதானமாக முடி வெடுக்க வேண்டுமென்ற கருத்துடன் பல கட்டங் களில் இது பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி சார்பில் அமைக்கப்பட்ட செழியன்-மாறன் குழுவினரும் ராஜமன்னார் குழுவின் அறிக்கையை அணுகினர். மத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையையும் அரசு பரிசீலித்தது. அதன் தொடர்பான கருத்துக்கள், இந்திய நாட்டு அரசியல் மேதைகளின் அபிப்பிராயங்கள், உலக நாடுகளின் நிலைமைகள் இவைகள் அனைத்தையும் ஆழச் சிந்தித்து ராஜ மன்னார் குழு அறிக் கைமீதும் - மாநில சுயாட்சிக் கொள்கை மீதும் - தமிழக அரசின் கருத்துரைகள் என்ற அறிக்கையை இந்த அவையின் முன் வைத் திருப்பதோடு அதனை ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தையும் உங்கள் மேலான வழி மொழிதலுக்காக வைத்துள்ளேன்.