பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் முன்னேற்றம் அடை வதற்கான சட்டங்களை இயற்றுவதற்கும் நிர்வாகத்தினை நடத்து வதற்கும் தேவைப்படும் அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றிருத் தல் வேண்டும். உண்மையான கூட்டாட்சி முறையில்தான் இது சாத்தியமாகும். நம் நாடு விடுதலை பெற்ற பின்னர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நாம் அடைந்துள்ள இதமற்ற அனுபவத்தை எண் ணிப் பார்க்கையில் மத்திய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங்களின் விளைவால் மாநிலங்கள் உறுதி குலைந்து ஊக்கமிழந்த நிலையில் இருப்பதையே காண்கிறோம். அரசியலமைப்பினை ஒற்றை ஆட்சிமுறையிலே செயற்படுத்தி, மத்திய அரசுக்குக் கீழ்ப்பட்டவைகளாக மாநிலங்களை நடத்தும் தீவிரப் போக்கு இருந்து வருகிறது. பெரும்பாலான அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிந்திருந்தால் தான் மத்திய அரசு வலுவுடன் இருக்க முடியும் என்பது கற்பனைக் கூற்றேயாகும். அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தவரும், மூத்த அரசியலறி ஞருமான திரு. கே. சந்தானம் அவர்கள் வலுவுள்ள மத்திய அரசு வேண்டுமென்ற கூற்றினை ஆய்ந்து கூறியுள்ளதாவது:- .இந்தியா சிதறிவிடாமலும் குழப்பத்தில் சிக்குண்டு குலைந்துவிடாமலும் இருப்பதற்கு வலுவுள்ள மத்திய அரசு இன்றி யமையாததுதான். ஆனால், அரசியல் அதிகாரங்கள் குவிந்திருந் தால்தான் அத்தகைய வலுவேற்படும் என்ற கூற்றினை நான் ஏற்ப தற்கில்லை. மாறாக, பரந்து கிடக்கும் இந்தியா முழுமையிலும் வாழும் பெருத்த மக்கள் தொகையினரின் சார்பான பொறுப்புக் கள் பலவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலம் மத்திய அரசு மீளமுடி யாத அளவுக்குப் பலவீனமாகிவிடுகிறது என்பதே எனது திட மான கருத்தாகும். அவசியமான அனைத்திந்தியப் பொறுப்பு களில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி, அப்பொறுப்புக்களை மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளாமல், அதே நேரத்தில், எஞ்சிய எல்லா அரசுத் துறைகளிலும் மாநிலங்களுக்கு முழு சுயாட்சி அளித்திடுவதன் வாயிலாகவே நாடாளுமன்றமும் மத்திய அரசும் உண்மையான வலுவுடன் உறுதியாக இருக்க முடியும். இந்தியா விடுதலையடைந்து இருபதாண்டு காலமாக ஒரே கட்சியின் அரசி யல் ஆதிக்கம் நிலவி வந்தது. இதன் விளைவாக இந்தியக் கூட்டாட்சி முறையில் தெளிவில்லாமல் வழி நடத்திச் செல்லும் போக்கு வலுப்பெற்றுள்ளது. இப்போக்கு மத்திய அரசுக்கு இன்னலைச் சேர்க்கிறது, மாநிலங்களுக்கு எரிச்சலையூட்டுகிறது.