பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 1967 ஜூன் 17 ஆம் நாளன்று சட்டமன்றப் பேரவையில் நிதி நிலை அறிக்கையை அளித்து ஆற்றிய உரையில் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதாவது:- இப் "மாநிலங்களின் வளர்ச்சி வேண்டு மென்று கோருவது நாட் டின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்ற வாதம் வீணானது. மத்திய மாநில அரசுகளின் நிதித் தொடர்பு முறைகள் அரசிய லமைப்பில் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த நிலைமைகள் வெகுவாக மாறிவிட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது எண்ணிப் பார்த்திருக்க இயலாத பற்பல புதிய போக்குகள் தோன்றியுள்ளன. மத்திய அரசிடம் அதி காரங்கள் பெருமளவில் குவிந்து விடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத் தினை எழுதியவர்சள் எண்ணிப் பார்த்திராத புதியதொரு துறை யின் மூலம் மத்திய அரசு மேற்கொண்டுள்ள அதிகாரங்கள் பெரு கியுள்ளன. இது மாநிலங்களுக்குக்கவலையளிப்பதாகும். பொருளா தாரத்திட்டம் என்பதுதான் அப்புதிய துறை. இதற்கானநிதிதிரட் டுதல்,நிதி ஒதுக்குதல், திட்டத்திற்காகப் பணத்தைச் செலவிடும் முறை இவையனைத்திலும் மத்திய அரசு ஏற்றுள்ள அதிகாரங்கள் மாநிலங்களைக் "கையேந்தி" நிற்கும் நிலைக்குத் தள்ளிவிட்டன. கட்சிக்கட்டுப்பாடு காரணமாக இது குறித்துப்பேசுவதற்குச் சிலர் தயங்கலாம். ஆனால், பொருளாதாரக் கண்கொண்டு பிரச்சினையை ஆய்ந்தோர் அனைவரு மத்திய-மாநில நிதி உறவு களில் எழுந்துள்ள இப் போக்குகள் குறித்துக் கவலை தெரிவித் துள்ளனர். அர சியல் சட்டத்தின் ஏழாவது இணைப்பில் மத்திய அரசுப் பட்டியலில் 36 முதல் 38 இனங்களாகக் கூறப்பட்டுள்ள பணம் வெளியிடுதல், அன்னியச் செலவாணி போன்ற துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் அடங்குவதால், பண வீக்கம், பற்றாக்குறை நிதி நிலை ஆகியவற்றுக்கான அனைத்துப் பொறுப்பும் மத்திய அரசினையே சேருகிறது. இதனால் விளையும் விலையேற்றத் திற்கும் மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இதன் பயனாக, விலைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் விளையும் விலையேற்றத்தினால் மாநிலங்கள் அவதி யுறுகின்றன. ஆனால் விலைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரங்கள் அரசியல சட்டப்படி மாநிலங்களுக்கு இல்லை. ஆதலால்தான், விலையேற்றம் காரண மாக அரசு அலுவ வர்களுக்கு ஊதிய உயர்வு தருவதால் ஏற்படும் அதிகச் செலவு, மலிவு விலையில் உணவுப் பொருள்களை வழங்குவதனால் ஏற்படும்