பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 இழப்பு, இவற்றில் மத்திய அரசும் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்க வேண்டியிருக்கிறது. மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருள்களைத் தருவதாலும், அரசு ஊழியர்களின் ஊதி யத்தை உயர்த்துவதாலும் ஏற்படும் பொறுப்புச் சுமையினை மாநிலங்களே தாங்கிக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு அடித்துக் கூறுகிறது இதுபற்றி நான் குறை கூறுவதன் காரணம் இப்பொழுது நன்கு விளங்குமென எண்ணுகிறேன். கட்சிக் கண்ணோட்டம் கருத்தினை மறைத்தாலன்றி, அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படும் மத்திய மாநில உறவுகளை ஆய்ந்தறிந் தோர் எனது வாதத்திலுள்ள நியாயத்தினை ஒப்புக்கொள்ளத் தயங்கமாட்டார்கள்." எனவே, மத்திய அரசிடம் அதிகமான அதிகாரங்கள் குவிந் திருப்பதால் அது உண்மையில் பலவீனந்தான் அடைகிறது என்பது தெளிவாகும். இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநிலங்கள் மத்திய அரசின் கைப்பாவைகளாக மாறி கையா லாகாத நிலையில் உள்ளன உண்மையான கூட்டாட்சி அமைப்பில், நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துத் தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை குறித்த அதிகா ரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் எஞ்சிய அதிகாரங்களுடன் மாநிலங் களிடம் இருக்க வேண்டும். மத்திய அரசும் மாநில அரசுகளும் தமக்குள்ள அதிகார வட்டத்திற்குள் சுயேச்சையாகச் செயல்பட வேண்டும். இத்தகைய கூட்டாட்சி முறை நிலவினாலதான் நாடு முழுவதுமாக நலமுறுதல் இயலுமென்பதே இந்த அரசின் உறுதி யான நம்பிக்கை. இதைக்கருத்திலே கொண்டுதான், மாநிலங்கள் தக்க அளவில் சுயாட்சியுரிமை பெற்றிட இயலும் வகையில் இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில் வேண்டிய திருத்தங்கள் செய்வதற்கான கருத்துரைகளை வழங்குமாறு, 1969 - ம் ஆண்டில் ஒரு குழுவினை இந்த அரசு நியமித்தது. டாக்டர் பி.வி. இராஜமன்னார் அவர்கள் தலைவராகவும், டாக்டர் ஏ. இலட்சுமணசாமி முதலியார் அவர் களும் திரு. பி. சந்திரா ரெட்டி அவர்களும் உறுப்பினர்களாகவும் இக் குழுவில் பணியாற்றினர். இக் குழுவின் அறிக்கை 1971-ம ஆண்டில் அளிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது இணைப்பில், 'மத்தியப் பட்டியல்", 'மாநிலப் பட்டியல்". "பொதுப்