பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 169-ஆவது பிரிவு. சட்டமன்ற மேலவைகளை எடுத்துவிடுவதற்கான அல்லது அமைத்திடுவதற்கான அதிகாரம், நாடாளுமன்றச் சட்டம் இயற் றும் தேவையில்லாமலேயே, மாநிலச் சட்டமன்றப் பேரவை களிடம் நிலைபெற்றிருத்தல் வேண்டும். 249-ஆவது பிரிவு. மாநிலப் பட்டியலில் காணும் எப்பொருள் குறித்தும் சட்ட மியற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கிற இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும். 252- ஆவ துப்பிரிவு. இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றம் சட்டமியற்றுவதற்கு அதிகார மளிக்கும் இப்பிரிவு நீக்கப்படவேண்டும். மாநிலச் சட்ட வரைவுகளை குடியாட்சித் தலைவரது ஆய்வுக்காக ஒதுக்குதல். மாநிலச் சட்ட வரைவுகளை, குடியாட்சித் தலைவரது ஆய்வுக் காகவும் இசைவுக்காகவும் ஒதுக்குவது குறித்த பிரிவு நீக்கப்பட வேண்டும். சட்டமியற்றும் பொதுப் பட்டியலின் வரம்புக்குள் வரும் விவகாரங்கள் குறித்து மையச் சட்டத்தைவிட மாநிலச் சட்டமே மேலோங்கியிருக்க வேண்டுமென்கிற வகையில் 254-ஆ வது பிரிவு திருத்தப்பட வேண்டும். ஆளுநர் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்தல். ஓர் அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன் குடியாட்சித் தலைவரின் கட்டளைகளைப் பெறும் அவசியத்தை ஏற் படுத்துகிற 213(1) பிரிவுக்கான நிபந்தனை நீக்கப்பட வேண்டும் மானியங்கள். ஐந்தாண்டுத் திட்டச் செலவுக்காகவும், திட்டத்தின்கீழ் வராத செலவுகளுக்காகவும் மாநிலங்களுக்கு மைய அரசு அளிக் கின்ற மானியங்கள், நிதி ஆணைக்குழு அல்லது அதைப்போல் சட்டப்படி அமைந்த அமைப்பு போன்ற தனிப்பட்ட, பாரபட்ச மற்ற அமைப்பு ஒன்றின் பரிந்துரைகளின்படியே வழங்கப்பட வேண்டும்.